background img

புதிய வரவு

எ‌ல்லையை தா‌ண்டினா‌ல் மீனவர்கள் ‌மீது இலங்கை சட்டப்படி நடவடி‌க்கை: கருணாநிதி

''இலங்கை மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டி வந்தால், இந்தியா எப்படி சட்டப்படி நடக்கிறதோ அதுபோல் இலங்கையும் சட்டத்தின் அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டும்'' என்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.


டெல்லியில் இ‌ன்று நடைபெற்ற முதலமை‌ச்ச‌ர்கள் மாநாட்டில் பே‌சிய முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி, பிரதமரின் வழிகாட்டுதலில், மத்திய உள்துறை அமைச்சரின் நுணுக்கமான மற்றும் சீரிய அணுகுமுறைகளால், 2010ஆம் ஆண்டு முழுவதும், உள்நாட்டுப் பாதுகாப்பில் பெரிய அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பதை இந்த அவையில் பதிவு செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.


தமிழத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து அமைதிப் பூங்காவாகவே விளங்கி வருகிறது என்பதை இந்த அவையில் குறிப்பிடுவதில் பெரும‌கி‌ழ்‌ச்‌‌சி அடைகிறேன். மாநில அரசும், தமிழகக் காவல் துறையும் விழிப்புடனும், கண்காணிப்புடனும் தொடர்ந்து செயல்பட்டு வருவதன் விளைவாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது.


தமிழ்நாட்டில், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் பெரிய அளவில் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. அண்மையில், வனப்பகுதிகளில் தீவிரவாதப் பயிற்சி முகாம்களை நடத்திட இடதுசாரித் தீவிரவாதிகள் மேற்கொண்ட முயற்சிகளைத் தமிழ்நாடு காவல்துறை முறியடித்துள்ளது என்பது மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாகத் தலைமறைவாகியிருந்த அந்த அமைப்புகளின் உறுப்பினர்களையும் கைது செய்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts