background img

புதிய வரவு

ஆ‌ட்‌சி‌யி‌‌ல் கா‌ங்‌கிரசு‌க்கு ப‌ங்கா? கருணாநிதி ப‌தி‌ல்

கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌க்கு ஆ‌ட்‌சி‌யி‌ல் ப‌ங்கு அ‌ளி‌ப்பது கு‌றி‌த்து இதுவரை எதுவு‌ம் பேச‌‌வி‌ல்லை எ‌ன்று கூ‌றிய முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, கூ‌ட்ட‌ணி‌யி‌ல் நாங்கள் இருப்பதாகச் சொன்னதை ராமதா‌‌ஸ் இல்லையெ‌ன்று மறுத்து‌வி‌ட்டார் எ‌ன்றா‌ர்.


டெல்லியில் நடைபெற்ற அனைத்து மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ‌வி‌ட்டு நே‌ற்‌றிரவு செ‌ன்னை ‌திரு‌ம்‌பிய முதலமைச்சர் கருணாநிதி அண்ணா அறிவாலய‌த்‌தி‌ல் செ‌ய்‌தியாள‌ர்களுக்கு பேட்டி அளித்தார்.


அ‌ப்போது அவ‌ரிட‌ம் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:


உங்கள் டெல்லிப் பயணம் எப்படி அமைந்தது?


வானம் நிர்மலமாக இருந்தது. வழியில் தடைகள் எதுவும் இல்லை. பொதுவாக நன்றாக பயணம் அமைந்தது.


கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்று பேசப்பட்டதா?


காங்கிரசும், தி.மு.க.வும் அணி சேர்ந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுவது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எத்தனை இடங்கள், யார் யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்பனவற்றை தி.மு.க.வின் தேர்தல் பணிக் குழுவோடு கலந்து பேசி தி.மு.க.வும், காங்கிரசும் அந்த விவரங்களை பிறகு அறிவிக்கும். நாளை அல்லது நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சியினுடைய குழுவிலே உள்ளவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படக்கூடும். தி.மு.க.வைப் பொறுத்தவரையில் நான் பொதுச் செயலாளரோடு கலந்து பேசி, மற்ற கட்சிகளோடு தொகுதி பங்கீடு குறித்து பேசுகின்ற குழுவிலே யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை அறிவிப்பேன்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts