background img

புதிய வரவு

எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம்: கைதானதால் ராசா குற்றவாளி அல்ல; தி.மு.க. பொதுக்குழு தீர்மானம்

எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம்:
 
 கைதானதால்  ராசா
 
 குற்றவாளி அல்ல;
 
 தி.மு.க. பொதுக்குழு தீர்மானம்முதல்-அமைச்சர் கருணா நிதி தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடியது. தி.மு.க. பொதுக்குழு இன்று காலை 10.15 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கூடியது. தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான கருணாநிதி தலைமை தாங்கினார். அவர் அலங்கரிக்கப்பட்ட அண்ணா படத்துக்கு மாலை அணிவித்தார்.பொதுச் செயலாளர் அமைச்சர் அன்பழகன், பொருளாளரும், துணை முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, துணை செயலாளர்கள் அமைச்சர் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குண பாண்டியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மத்திய மந்திரிகள் மு.க. அழகிரி, நெப்போலியன், கனிமொழி எம்.பி., நடிகை குஷ்பு, மற்றும் அமைச்சர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்,பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்த சேகர்பாபு எம்.எல்.ஏ., கூட்டத்துக்கு வந்திருந்தார்.


கூட்டத்தில் சட்டசபை தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரசார வியூகம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இலங்கை கடற்படை யினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணை உள்பட பல முக்கிய பிரச்சினைகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


பொதுக்குழுவில் மொத்தம் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆ.ராசா கைது செய்யப்பட்டது பற்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:- 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் காட்டும் ஒரே சான்று இந்திய தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கை ஆகும்.


இதே தணிக்கை அறிக்கை பா.ஜ.க. ஆட்சி நடைபெற்ற போதும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு பெரு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டியிருக்கின்றது. தற்போது எழுந்துள்ள எதிர்ப்போ குற்றச்சாட்டோ அப்போத கூறப்படவில்லை. மாறாக ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டு மென்றும், கைது செய்ய வேண்டு மென்றும், இல்லா விட்டால் பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று தங்களின் ஜனநாயக் கடமையைக் கூட நிறைவேற்ற மறுத்து, தொடர்ந்து வலியுறுத்தி அதனைச் செயல்படுத்தி காட்டி அதிலே வெற்றி பெற்ற பிறகும், இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழுவின் விசாரணை வேண்டுமென்று குரல் கொடுத்து வருகின்றனர்.


தணிக்கை அறிக்கை குறித்து முறைப்படி நடத் தப்பட வேண்டிய விசாரணை- பாராளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழு வினால், அதன் தலைவரான பா.ஜ.க.வைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி தலைமையிலே நடைபெற்று வருகின்றது. ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமென்ற பெருந்தன்மையோடு, மேலம் இந்தப் பிரச்சினையில் 2001-ம் ஆண்டிலிருந்து 2009 முடிய அரசுகள் பின் பற்றிய ஒதுக்கீட்டு கொள்கை முறையாக நடை முறைப்படுத்தப்பட்டிருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சிவராஜ் பாட்டீல் நியமிக்கப்பட்டு, அவரும் 31-1-2011 அன்று தமது அறிக்கையை சமர்ப் பித்து விட்டார்.


இந்திய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை அடிப்படையாக வைத்து இந்திய புலனாய்வுத் துறை உச்ச நீதிமன்றத்தின் மேற் பார்வையில் காலக்கெடு நிர்ணயித்து இந்தப் பிரச்சினையில் புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டு புலனாய்வு தீவிரமாக நடந்து வருவதோடு, இந்த வழக்கில் புலனாய்வுத் துறையினால் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.


இத்தகைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் நாடாளு மன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி.) மட்டும்தான் விசாரிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்துவதும், மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறி தீர்வு காணும் வாய்ப்பை விட்டு விட்டு, நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஏற்கனவே 22 நாட்கள் முடக்கியதும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளாகவே இப்பொதுக்குழு கருதுகிறது.


தொடக்கத்தில் இந்த பிரச்சினை இருந்த போதே 8-12-2010 அன்று செய்தியாளர்கள் கழக தலைவர் கலைஞரிடம் கேட்டபோது, ராஜா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அதற்குப்பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஒருவர் கைது செய்யப்பட்டு விட்ட காரணத்தாலேயே அவர் குற்றவாளியாக ஆகி விட மாட்டார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே இந்த பிரச்சினையை பொறுத்தவரை தி.மு.க. ஒரு திறந்த புத்தமாக உள்ளது என்பதை சுட்டிக் காட்டுவதோடு, இதனைப் பெரிதுபடுத்தி எப்படியாவது கழகத்தின் மீத களங்கம் சுமத்த நினைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளை இப்பொதுக் குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.


தி.மு.க. பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள் விவரம் வருமாறு:-


இலங்கைக் கடற் படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் மீன்பிடி வலைகள் படகுகள் சிதைக்கப்பட்டும், தமிழக மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீன்கள் கொள்ளையடிக்கப்படுவதுமான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர், வேதாரண்யம் பகுதி, புஷ் பவனம் கிராமத்தைச் சார்ந்த மீனவர் ஜெயக்குமார் இலங்கைக் கடற்படையினரால் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடுஞ்செயலுக்கு இலங்கைக் கடற்படையினர் காரணமல்ல என வாதிடும் இலங்கை அரசை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.


தமிழக முதல்வர் தலைவர் கலைஞர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு எழுதிய கடிதம், அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட அவசர நடவடிக்கைகள் காரணமாக மத்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் தலைமையில் குழு ஒன்று இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்து இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.


புதுடெல்லி சென்ற தமிழக முதல்வர், கலைஞர் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா , வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமாராவ் 1-2-2011ல் சந்தித்து தமிழக மீனவர் பிரச்சினையில் இனியும் இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள்நடைபெறாது எனவும், மேலும் இந்தப் பிரச்சினையில் அவ் வப்பொழுது சுமுக முடிவுகள் மேற்கொள் வதற்காக இருசாராரையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுக் குழு நியமிப்பதென இலங்கை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.


தமிழக மீனவர்கள் பிரச்சினையில் என்றும் கவனமாகவும், எச்சரிக் கையாகவும் செயல்பட்டு, அவர்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொண்டுவரும் தமிழக முதல்வர் கலைஞர் மத்திய அரசின் முழுமையான கவனத்தை மீனவர் பிரச்சினைப் பக்கம் திருப்பி, நிரந்தர பாதுகாப்பிற்கு உத்திரவாதம் பெற்றுத் தந்தமைக்கு இப்பொதுக்குழு நன்றியையும் வாடிநத்தையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டு - பிறகு கைவிடப்பட்ட - கச்சத்தீவில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை மீண்டும் நிலைநாட்டுவதற்கேற்ற வகையில் - புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்ப தையும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பவும், அவர்களது நல்வாழ்வுக்கான உதவிகள் இலங்கை அரசினால் வழங்கப்படவும் மத்திய அரசு இலங்கை அரசினை வலியுறுத்த வேண்டு மென்றும், ஏற்கனவே உறுதியளித்தபடி இலங்கைத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு செய்வது ஒன்றுதான் நிரந்தர சகவாழ்வுக்கு வழி வகுத்திடும் என்பதால் அதற்கான அரசியல் தீர்வினைக்காண தேவையான முயற்சிகள் அனைத்தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொண்டு ஆவன செய்ய வேண்டுமென்றும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


இந்திய நாடு விடுதலை பெற்ற பின்னர் - முதல் மாநிலமாக - கழக அரசால் 1971ஆம் ஆண்டு “குடிசை மாற்று வாரியம்” உருவாக்கப்பட்டு, குடிசை வீடுகளுக்குப் பதிலாக மாடி வீடுகள் கட்டிதரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாடுமுழுவதும், ஏழை எளிய மக்கள் வசிக்கும் 21 லட்சம் குடிசை வீடுகளுக்குப் பதிலாக, மனிதநேய அடிப்படையில், “கான்கிரீட் வீடுகள்” கட்டித் தரும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என்ற மகத்தான திட்டத்தை அறிவித்து, இந்த ஆண்டில், முதல் கட்டமாக 2,250 கோடி ரூபாய் செலவில் குடிசை வீடுகளுக்குப் பதிலாக 3 லட்சம் “கான்கிரீட் வீடுகள்” கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆறாண்டு காலத்தில் தமிழ்நாட்டில் குடிசைகளே இல்லாத வாடிநவிடங்கள் அமைக்கும் வாடீநுப்பை இத்திட்டத்தின் மூலம் கழக அரசு உருவாக்கியுள்ளது.


மேலும் பேரூராட்சிகளிலும், நகர்ப் புறங்களிலும் வாழும் ஏழையெளிய மக்களுக்கான வீடு கட்டும் திட்டம் பற்றியும் கலைஞர் அரசு அறிவிப்பு செய்து அதனை நடை முறைப் படுத்தவுள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள “வாழ்வுரி மைக்கு ஆதாரமான” நிரந்தர கான்கிரீட் வீடுகள், இந்தத் திட்டத்தின் மூலம் முழுமையாகவே, தமிழக மக்களுக்கு, கழக அரசால் வழங்கப்படுவதாக இப் பொதுக்குழு கருதுகிறது. எனவே, இத்தகைய மக்களின் அடிப்படை உரிமையை நிறைவு செய்யும் திட்டத்தை அறிவித்துச் செயல்படுத்தி வருகின்ற தமிழக முதல்வர் கலைஞருக்கு இப்பொதுக்குழு மகிழ்ச்சிப் பெருக்குடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.


சென்னையில் உள்ள தொன்மையும், புகழும் பெற்ற தலைமை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ்காந்தி மருத்துவ மனை என்று பெயர் சூட்டியமைக்கு தமிழக முதல்வர் கலைஞருக்கு இப்பொதுக் குழு நன்றியையும் பாராட்டு தல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக, மத்திய அரசால் 1983-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட நீதிபதி சர்க்காரியா குழுவும், 2000-ஆம் ஆண்டில் நீதிபதி வெங்கடாசலய்யா குழுவும் மத்திய-மாநில உறவுகளை மாற்றியமைக்க வேண்டும் என்று பல பரிந்துரைகளை வழங்கியுள்ளன.


மீண்டும் 2008-ல் மத்திய-மாநில உறவுகளை ஆய்வதற்கு நீதிபதி பூஞ்சி குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்த எல்லா குழுக்களிட மும் திராவிட முன்னேற்றக் கழகம் தனது கருத்துரைகளை எடுத்துரைத்து, முழுமையானதும், உண்மையானது மான கூட்டாட்சி முறையை மாநில சுயாட்சி அடிப்படையில் அமைத்திட வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளது. மாநிலத்தில் சுயாட்சியும், மத்தி யில் கூட்டாட்சியும் ஆக்கப்பூர்வமாக உருவாகி, கூட்டாட்சி அமைப்பு வலுப்பெற, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தேவையானத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று - இந்தப் பொதுக் குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


இந்திய நாடாளுமன்றத்தி லும், மாநிலச் சட்டப் பேரவை களிலும் மகளிர்க்கு 33 சதவிகித தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் சட்ட முன் வடிவு அவ்வப்போது ஏற்படும் கருத்து மாறுபாடுகளினால் இன்றளவும் நிறைவேற்றப் படாமல் உள்ளது. எனவே நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் ஆகிய ஆட்சி மன்றங்களில் மகளிர் உரிமை பெறுவதை மேலும் காலம் தாடிநத்தாமல், 33 சதவிகித இட ஒதுக்கீடு மகளிர்க்கு அளிக்கும் சட்டத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்று இப்பொதுக் குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


புதுடெல்லியில் நடைபெற்ற உள்நாட்டுப் பாதுகாப்புக் குறித்த முதல்- அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற தமிழக முதல்வர் கலைஞர், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர், சோனியாகாந்தியைச் சந்தித்து, தி.மு.க.-காங்கிரஸ் தேர்தல் உடன்பாட்டை உறுதி செய்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதத்தை ஈடுசெய்வதற்கு, தேசிய பேரிடர் நிதியிலிருந்து ரூ.1832 கோடி நிதி கோரியும், தமிழக மீனவர் பிரச்சினையில் நிரந்தரமான உடனடி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு உத்திரவாதம் பெற்றும், முல்லைப் பெரியாறு அணை குறித்த சுற்றுச்சூழல் ஆய்வுக்குழு தேவையற்றது என்பதை எடுத்துக் காட்டியும்- இந்தக் கோரிக்கைகளுக்கும் வேண்டுகோளுக்கும் பிரதம அமைச்சரிடமிருந்து சாதகமான இசைவையும், உறுதியையும் பெற்று வந்தமைக்காக தமிழக முதல்வர் கலைஞருக்கு இப்பொதுக்குழு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.


பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் நிதின்கட்காரி சமீபத்தில் சென்னையில் அவர்களது கட்சியின் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் கழக அரசிற்கும் கழகத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு கருத்துக்களை வெளியிட்ட நிதின் கட்காரியை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இந்தியநாடு முழுமையும் ஏற்பட்டுவிட்ட விலைவாசி உயர்வு, தமிழ்நாட்டிலும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. அந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்களின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டு, நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. காய்கறிகளை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து, புதிதாகத் திறக்கப்பட்டுள்ள விற்பனை மையங்கள் மூலம் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.


மேலும் நெல், பயறு வகைகள் உற்பத்தியை அதிகப்படுத்துவற்கான நீண்டகாலத் திட்டமும் செயல்படத் தொடங்கியிருக்கின்றது. தமிழ்நாட்டில் உள்ள உழவர் சந்தைகளை, மேலும் விரிவாக்கவும் புதிய உழவர் சந்தைகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய உடனடி நடவடிக்கை மேற்கொண்டு விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவந்த, தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களை இப்பொதுக் குழு நன்றியுடன் பாராட்டுகிறது.


தமிழ்நாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து தொழில்துறையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ற சூழ்நிலைகளையும், உள் கட்டமைப்புக் களையும் உருவாக்கி ஒற்றைச் சாளர முறையை நடைமுறைப்படுத்தியுள்ள முதல்வர் தலைவர் கலைஞர் தான் இதற்குக்காரணம் என்பதைச் சுட்டிக்காட்டி, அவருக்கு இப்பொதுக்குழு நன்றியையும், பாராட்டு தலையும் தெரிவித்துக் கொள்கிறது.


முதல்வர் கலைஞர் மேற்கொண்ட முயற்சியால், அரசுத் துறையில் 5 இலட்சத்து 5 ஆயிரத்து 314 பேருக்கு வேலைவாய்ப்பு நிரந்தரமாக அளிக்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்காக பயிற்சியுடன்கூடிய வேலை வாய்ப்பு திட்டம் ஒன்று புதிதாக துவங்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் முயற்சியினால் வேலைவாய்ப்பினை தேடித்தரும் முகாம்கள் நடத்தப்பட்டு அதன்மூலம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது. இந்தி பேசாத மக்கள் விரும்புகிற காலம் வரை மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலமும் நீடிக்கும் என்றும்; பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும் பண்டித நேரு அவர்கள் வழங்கிய உறுதிமொழி எப்பொழுதும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் திராவிட முன்னேற்றக் கழகம்; இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகள் நிரந்தரமாகக் காப்பாற்றப்பட; அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆட்சி மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவது ஒன்றுதான் வழி என்றும் உறுதியாக நம்புவதோடு; இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குவதில் தாமதம் ஏற்படுமேயானால், முதல்கட்டமாக - திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலை இலக்கியப் பண்பாடும், வளமும் நிறைந்த செம்மொழியுமான தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கவேண்டுமென்று இந்தப் பொதுக் குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


சென்னை உயர் நீதிமன் றத்தில் தமிழ் மொழியைப்பயன்படுத்துவது தொடர்பாக தமிழகச் சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் பரிந்துரையினையும் - சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் பரிந்துரையினையும் பெற்று; மத்திய அரசுக்கு முதலமைச்சர் கலைஞர் அனுப்பியுள்ளார். தமிழக முதலமைச்சர் கலைஞர் தமிழ் உள்ளிட்ட மாநில ஆட்சி மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.


தமிழகத்தைச் சார்ந்த தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமரை நேரிலே சந்தித்து இது குறித்து கோரிக்கை விடுத்துள்ளார்கள். மாநில மொழியைப் பேசக் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் நீதிகோரி அன்றாடம் உயர் நீதி மன்றங்களை அணுகக்கூடிய நிலையில் - நீதி மன்ற நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில ஆட்சி மொழிகளிலும் வெளி யிடப்படுவதை அந்தந்த மாநில நீதி மன்றங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டு மென்று மத்திய அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts