background img

புதிய வரவு

தாஹிர் சதுக்கத்தில் கலவரம்: 3 பேர் பலி

எகிப்தின் அதிபராக 30 ஆண்டுக்காலமாக இருந்துவரும் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும் என்று கோரி, அந்நாட்டுத் தலைநகர் கெய்ரோவில் உள்ள தாஹிர் சதுக்கத்தில் திரண்டுள்ள போராட்டக்காரர்களுக்கும் முபாரக் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தாஹிர் சதுக்கத்தில் திரண்டுள்ள பல ஆயிரக்கணக்கான முபாரக் எதிர்ப்பாளர்களை அங்கிருந்து விரட்ட குதிரைகளிலும், ஒட்டகங்களிலும் வந்த முபாரக் ஆதரவாளர்கள் தாக்குதலில் இறங்கியதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

தலைநகர் கெய்ரோவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வரும் நிலையில், அங்குள்ள அமெரிக்கர்கள் அனைவரையும் வெளியேறுமாறு அமெரிக்க அரசு கூறியுள்ளது.

30 ஆண்டுகளாக தொடர்ந்து அதிபராக இருந்து வரும் ஹோஸ்னி முபாரக், தனது பதவிக்காலம் முடியும் வரை - வரும் செப்படம்பர் மாதம் வரை பதவியில் இருந்துவிட்டு வெளியேறுவதாக கூறினார். அதன் பிறகு தான் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டியிடுவதில்லை என்றும் உறுதியளித்தார். ஆனால் முபாரக் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை தளர்த்தப்போவதில்லை என்று போராட்டக்காரர்கள் கூறிவிட்டனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts