டெல்லியில் நடைபெறும் முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க கடந்த 30ஆம் தேதி டெல்லிக்கு சென்ற தமிழக முதலமைச்சர் கருணாநிதியிடம், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தவிர வேறு எந்தெந்த கட்சிகள் இடம் பெறுவதாக உள்ளன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, தற்போதுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் தங்கள் அணியிலே உள்ளன என்று கூறினார்.
கருணாநிதியின் இந்த கருத்து குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘முதலமைச்சர் கருணாநிதி தனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி பா.ம.க. இன்னும் முடிவு எடுக்கவில்லை. கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பேசி இதுபற்றி விவாதித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.
அதோடு, மற்ற கட்சிகளிடம் இருந்தும் பா.ம.க.வுக்கு அழைப்புகள் வந்திருப்பதாகவும் ராமதாஸ் கூறியிருந்தார். கூட்டணிக்கு ராமதாஸ் கெஞ்சிக் கொண்டிருந்த நிலையில், கருணாநிதி வாயாலேயே அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும், ராமதாஸ் இவ்வாறு கருத்து தெரிவித்ததை தி.மு.க தலைமை அவ்வளவாக ரசிக்கவில்லை.
இதனையடுத்துதான் ‘‘தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வைச் சேர்ப்பது குறித்து நாங்களும் முடிவெடுக்கவில்லை’’ என்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்த பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ராமதாஸ், கருணாநிதி ஆகியோரின் இத்தகைய அறிவிப்பால் தமிழக அரசியலில் கூட்டணித் தொடர்பான குழுப்பம் தீவிரமடைந்துள்ளது.

0 comments :
Post a Comment