background img

புதிய வரவு

கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை: எகிப்து அரசு அறிவிப்பு

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலக கோரி போராட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

எகிப்தில் சுமார் 30 ஆண்டுகளாக அதிபராக உள்ள ஹோஸ்னி முபாரக் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கெய்ரோவில் ஏறக்குறைய ஒரு வாரமாக பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,கிளர்ச்சியாளர்களை இராணுவப் படையினர் மூலம் அடக்கிவிடலாம் என்ற முடிவுக்கு வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்,நேற்று இராணுவ தலைமையகத்திற்கு சென்றார்.

அங்கு இராணுவ உயரதிகாரிகள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணை அதிபர் ஒமர் சுலைமான் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து வீதிகளில் கூடுதல் இராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர்.

இருப்பினும் கிளர்ச்சியாளர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட மாட்டாது என்று இராணுவம் அறிவித்ததைத் தொடர்ந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக முபாரக் அரசு தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts