background img

புதிய வரவு

சார்க் மாநாடு முடிவுகள்:கிருஷ்ணா வேதனை

திம்பு:"சார்க்' மாநாட்டில் ஏற்படும் முடிவுகளை அமல்படுத்துவது மிகப் பெரிய சவாலாக உள்ளது' என, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, சார்க் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.பூடானின் திம்பு நகரில், சார்க் மாநாடு நடக்கிறது. ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இந்தியா, இலங்கை, மாலத்தீவு, பூடான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சர் கிருஷ்ணா குறிப்பிடுகையில், "சார்க் நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தகத்தை மேம்படுத்த முட்டுக்கட்டையாக உள்ள விஷயங்களின் பட்டியலை இந்தியா குறைத்துக் கொண்டுள்ளது. ஒவ்வொரு முறையும் நாம் இந்த மாநாட்டில் மேற்கொள்ளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை அமல்படுத்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதை சார்க் உறுப்பு நாடுகளின் நண்பர்கள் ஒப்புக்கொள்வர், என நினைக்கிறேன்' என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts