background img

புதிய வரவு

சேனைக்கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள் :


சேனைக்கிழங்கு - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - சிறிதளவு
சோள மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


மசாலா அரைக்க :


சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
மிளகு - 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் - 2


செய்முறை :


சேனைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.நறுக்கிய துண்டுகளுடன் உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து முக்கால் பாகம் வேக வைக்கவும்.மசாலா பொருட்களை தனியே அரைத்துக் வைத்து கொள்ளவும்.வேகவைத்த கிழங்குடன் அரைத்த மசாலா,சோள மாவு,தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் கலந்து வைக்கவும்.எண்ணெயைக் காயவைத்து,கிழங்குகளைப் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts