background img

புதிய வரவு

கச்சத்தீவு புதிய ஒப்பந்தம்- தி.மு.க. வலியுறுத்தல்

கச்சத்தீவில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை மீண்டும் நிலைநாட்டுவதற்கு ஏற்ற வகையில் புதிய ஒப்பந்தம் போடவேண்டும் என்பதை வலியுறுத்தி, திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதே நிரந்தர சக வாழ்வுக்கு வழிவகுத்திடும் என்பதால், அரசியல் தீர்வுகாண அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சித்ரவதை செய்யப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும், மீன்பிடி வலைகள் சிதைக்கப்பட்டும், தமிழக மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீன்கள் கொள்ளையடிக்கப்படுவதுமான நடவடிக்கைகளின் உச்சக்கட்டமாக சில நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் பகுதி புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் இலங்கை கடற்படையினரால் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடுஞ்செயலுக்கு இலங்கை கடற்படையினர் காரணம் அல்ல என்று வாதிடும் இலங்கை அரசுக்கு திமுக பொதுக்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

கச்சத்தீவில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை மீண்டும் நிலைநாட்டுவதற்கு ஏற்ற வகையில் புதிய ஒப்பந்தம் போடவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதே நிரந்தர சக வாழ்வுக்கு வழிவகுத்திடும் என்பதால், அரசியல் தீர்வுகாண அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts