செல்வராகவனை விவாகரத்து செய்த பின் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் சோனியாஅகர்வால். “வானம்” படத்தில் சிம்புவுடன் நடித்து வருகிறார்.
இதில் பிரகாஷ்ராஜ் ஜோடியாக வருகிறார். மேலும் அக்காள், அண்ணி வேடங்களுக்கு படங்கள் குவிகின்றன. கவர்ச்சியாக நடிக்கவும் வாய்ப்பு வருகிறது. ஆனால் கவர்ச்சியாக நடிப்பது இல்லை என்று சோனியா முடிவு செய்துள்ளார்.
மலையாளப் படத்தில் மம்முட்டியுடன் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடப் போவதாகவும் அதில் கவர்ச்சியாக வர சம்மதித்துள்ளதாகவும் சோனியா அகர்வால் பற்றி செய்திகள் வந்தன. இதை சோனியா மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
மலையாளத்தில் மம்முட்டியை வைத்து “டபுள்ஸ்” படம் எடுக்கும் இயக்குனர் சோகன் என்னை அணுகினார். அந்த படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடும்படி என்னிடம் கேட்டார். நான் மறுத்து விட்டேன். ஆனால் அதில் நடிக்கப்போவதாக செய்திகள் வந்துள்ளன. அது உண்மை இல்லை.
இவ்வாறு சோனியா அகர்வால் கூறினார்.

0 comments :
Post a Comment