background img

புதிய வரவு

ஜப்பானில் அணுகதிர் வீச்சு அதிகரிப்பு

ஜப்பானில் புகுஷிமா அணு உலைக்கூடத்தில் உள்ள தண்ணீரில் அணுகதிர் வீச்சு ஒருகோடி மடங்கு அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் அங்கு இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஜப்பானில் கடந்த 11ந் தேதி பூகம்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. இதன் காரணமாக 27 ஆயிரம் பேர் பலியானார்கள்.


பூகம்பம் சுனாமி காரணமாக புகுஷிமாவில் உள்ள 6 அணு உலைகளில் உள்ள குளிரூட்டும் இயந்திரங்களில் பாதிப்பு ஏற்பட்டு, அணு உலைகள் வெடித்தன. இதனால் அணுகதிரியக்கம் கசிய தொடங்கியது.


2வது அணு உலைகூடத்தில் ஜப்பானிய அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் அங்கு உள்ள தண்ணீரில் இயல்பு நிலையை விட கதிரியக்கத்தின் அளவு ஒரு கோடி மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது.


அணு உலைக்கூடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் ஒரு கிழூபிக் செ.மீ. தண்ணீரில் 209 கோடி பெக்குயெரல் (கதிர் வீச்சின் அளவு) கதிரியக்கம் இருப்பது தெரிய வந்ததாக அணு உலை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் அனைவரையும் உலைக்கூடத்தை விட்டு அதிகாரிகள் வெளியேற்றினார்கள்.


புகுஷிமா நகரில் இருந்து 30 கி.மீ.தொலைவில் உள்ள பகுதியில் கூட கதிரியக்கத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புகுஷிமா அணு உலைக்கு அருகில் உள்ள கடலில் கதிரியக்கத்தின் அளவு இயல்பு நிலையை விட 1850 மடங்கு அதிகம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடல் வாழ் உயிரினங்களை உணவாக உட்கொள்ளக்கூடாது என்று அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.


இதற்கிடையில் ஜப்பானின் அணுசக்தி பிரச்சினை பல மாதங்களுக்கு நீடிக்கும் என்று வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி கமிஷன் எச்சரித்து உள்ளது.


பூகம்பம் மற்றும், சுனாமி, ஆகியவற்றுடன் அணுகதிர் வீச்சு பாதிப்பு காரணமாக ஜப்பானில் இருந்து உலக னநாடுகளுக்கு மீன் மற்றும் கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts