background img

புதிய வரவு

இடைத்தேர்தல் வெற்றி மூலம் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் : எடியூரப்பா

பெங்களூரு : ""என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, இடைத்தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதன் மூலம் பதிலளிப்பேன்,'' என, முதல்வர் எடியூரப்பா கூறினார். கர்நாடக பா.ஜ.,வில் உட்கட்சி பூசல், நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. டில்லிக்கு சென்றுள்ள மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா தலைமையிலான அதிருப்தியாளர்கள், பா.ஜ., தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோரை சந்தித்து, முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பாவை இறக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா இன்று டில்லி செல்கிறார். பெங்களூருவில் நேற்று அவர் கூறுகையில், "கர்நாடகாவில் நடக்கும் மூன்று தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., வெற்றி பற்றி தான் நான் சிந்தித்து வருகிறேன். கடவுள் அருளால் மூன்று தொகுதிகளிலும் பா.ஜ., கண்டிப்பாக வெற்றி பெறும். இது பா.ஜ.,வின் கவுரவ பிரச்னை.

எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ம.ஜ.த., கூறிய குற்றச்சாட்டுகள் எடுபடாது. கர்நாடக பா.ஜ.,வில் எந்த குழப்பமும் இல்லை. ஈஸ்வரப்பா என் நெருங்கிய நண்பர். அவருக்கும், எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. மீடியாக்கள் தேவையில்லாத பிரச்னையை கூறி வருகின்றன. நாங்கள் ஒற்றுமையுடன் செயல்படுகிறோம். எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை' என்றார்.

நேற்று முன்தினம் முதல்வர் எடியூரப்பாவின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற சில அமைச்சர்கள், டில்லிக்கு சென்றுள்ளனர். மேலிட தலைவர்களை சந்தித்து, எடியூரப்பா மீது புகார் கூற திட்டமிட்டுள்ளனர்.

கர்நாடக மாநில பா.ஜ., மேலிட பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் பெங்களூரு வந்து, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்துவார் என்று தெரிகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts