background img

புதிய வரவு

மிருகங்களின் உறுப்புகளை மனிதனுக்குப் பொருத்த ஆராய்ச்சி!

பெய்ஜிங்: மிருகங்களின் உறுப்புகளை மனிதனுக்குப் பொருத்திப் பார்க்கும் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர் சீன மருத்துவ விஞ்ஞானிகள்.

இப்போது தேவையான உடல் உறுப்புகளை மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெற்று, பாதிக்கப்பட்ட மனிதருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்திவருகிறார்கள்.

மனித உறுப்புகள் கிடைப்பது அரிதாக உள்ளதால், தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மிருகங்களின் உடல் உறுப்புகளை பொருத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

சீனாவில் உள்ள நான்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதற்கான ஆய்வில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன.

அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பின்னர் மற்ற விலங்குகளின் உடல் உறுப்புகளையும் பொருத்திப் பார்க்கும் ஆராய்ச்சியை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts