background img

புதிய வரவு

நியூசி., புது அவதாரம்: தெ.ஆப்ரிக்கா சேதாரம்! * ஜேக்கப் ஓரம் அபாரம்

மிர்புர்: உலக கோப்பை பரபரப்பான காலிறுதி போட்டியில் அசத்தலாக ஆடிய நியூசிலாந்து அணி, தென் ஆப்ரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் அரையிறுதிக்கு "சூப்பராக' முன்னேறியது. அபாரமாக பந்துவீசிய ஜேக்கப் ஓரம், நியூசிலாந்தின் வெற்றிக்கு கைகொடுத்தார். வழக்கம் போல் சொதப்பிய தென் ஆப்ரிக்க அணி, தொடரில் இருந்து வெளியேறியது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று வங்கதேசத்தில் உள்ள மிர்புரில் நடந்த மூன்றாவது காலிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணியில் ஜேம்ஸ் பிராங்க்ளின் நீக்கப்பட்டு, லூக் உட்காக் இடம் பெற்றார். தென் ஆப்ரிக்க அணியில் மார்ன் வான் விக்கிற்கு பதிலாக டிவிலியர்ஸ் வாய்ப்பு பெற்றார். "டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.
துவக்கம் மோசம்:
நியூசிலாந்து அணி திணறல் துவக்கம் கண்டது. ராபின் பீட்டர்சன் சுழலில் அவரிடமே "கேட்ச்' கொடுத்து பிரண்டன் மெக்கலம்(4) வெளியேறினார். ஸ்டைன் வேகத்தில் கப்டில்(1) வீழ்ந்தார். இதையடுத்து 2 விக்கெட்டுக்கு 16 ரன்கள் எடுத்து தத்தளித்தது. பின் ராஸ் டெய்லர், ஜெசி ரைடர் இணைந்து போராடினர். இவர்கள் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக ஆட, ஸ்கோர் நகர்ந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்த நிலையில், ராஸ் டெய்லர்(43), இம்ரான் தாகிர் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த ஸ்டைரிஸ்(16) ஏமாற்றினார். அரைசதம் கடந்த ரைடரும்(83), தாகிர் பந்தில் நடையை கட்ட, மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. நாதன் மெக்கலம் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். மார்கல் வீசிய போட்டியின் 49வது ஓவரில் ஜேக்கப் ஓரம்(7), வெட்டோரி(6) அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் பொறுப்பாக ஆடிய வில்லியம்சன் (38 *), ஓரளவுக்கு கைகொடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 221 ரன்கள் மட்டும் எடுத்தது.
தென் ஆப்ரிக்க தரப்பில் மார்கல் 3, ஸ்டைன் 2, இம்ரான் தாகிர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
திணறல் துவக்கம்:
சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணி துவக்கத்தில் தடுமாறியது. நாதன் மெக்கலம் வீசிய முதல் ஓவரில் ஆம்லா(7) வெளியேறினார். கேப்டன் ஸ்மித்(28) அதிக நேரம் நிலைக்கவில்லை. பின் அனுபவ காலிஸ், டிவிலியர்ஸ் இணைந்து பொறுப்பாக ஆடினர். சவுத்தி பந்தில் சிக்சர் அடிக்க முயன்ற காலிஸ்(47), எல்லைக் கோட்டு அருகே ஜேக்கப் ஓரத்தின் கலக்கல் "கேட்ச்சில்' அவுட்டானார். நாதன் மெக்கலம் வீசிய போட்டியின் 28வது ஓவரில் தென் ஆப்ரிக்க அணிக்கு இரட்டை "அடி' விழுந்தது. 4வது பந்தில் டுமினி(3) போல்டானார். 6வது பந்தில் டிவிலியர்ஸ்(35) ரன் அவுட்டானார்.
சொதப்பல் ஆட்டம்:
நியூசிலாந்தின் அபார பந்துவீச்சில், தென் ஆப்ரிக்க அணிக்கு தொடர்ந்து சேதாரம் ஏற்பட்டது. ஓரம் பந்தில் போத்தா(2) போல்டானார். அடுத்து வந்தவர்களும் பொறுப்பற்ற முறையில் விளையாடினர். ஓரம் வேகத்தில் ராபின் பீட்டர்சனும்(0) வெளியேறினார். ஸ்டைன்(8) கைகொடுக்க தவறினார். போராடிய டு பிளசிஸ் 36 ரன்களுக்கு வெளியேற, தென் ஆப்ரிக்க அணி 43.2 ஓவரில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன் மூலம் உலக கோப்பை "நாக்-அவுட்' போட்டிகளில் சொதப்பும் தென் ஆப்ரிக்க அணியின் பலவீனம் மீண்டும் ஒருமுறை அம்பலமானது.
இம்முறை அரையிறுதிக்கு முன்னேறிய நியூசிலாந்து புதுஅவதாரம் எடுத்துள்ளது. இன்று நடக்கும் இலங்கை-இங்கிலாந்து மோதலில் வெற்றி பெறும் அணியுடன், அரையிறுதியில்(வரும் 29ம் தேதி) நியூசிலாந்து விளையாடும்.
நான்கு விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து வீரர் ஜேக்கம் ஓரம் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
ஆறாவது முறை
நேற்று தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து அணி, உலக கோப்பை அரங்கில் ஆறாவது முறையாக (1975, 79, 92, 99, 2007, 2011) அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் கடந்த ஐந்து முறையில் ஒரு முறை கூட பைனலுக்கு முன்னேறவில்லை. கடந்த 1983, 87ல் முதல் சுற்றோடு வெளியேறிய நியூசிலாந்து அணி 1996ல் காலிறுதி வரையிலும், 2003ல் "சூப்பர்-6' சுற்று வரையிலும் முன்னேறியது.
ஸ்கோர் போர்டு
நியூசிலாந்து
கப்டில்(கே)போத்தா(ப)ஸ்டைன் 1(14)
பிரண்டன்(கே)+(ப)பீட்டர்சன் 4(4)
ரைடர்(கே)இங்ராம்(ப)இம்ரான் தாகிர் 83(121)
டெய்லர்(கே)காலிஸ்(ப)இம்ரான் தாகிர் 43(72)
ஸ்டைரிஸ்(ப)மார்கல் 16(17)
வில்லியம்சன்-அவுட்இல்லை- 38(41)
நாதன்(கே)டுமினி(ப)ஸ்டைன் 6(18)
ஓரம்(ப)மார்கல் 7(6)
வெட்டோரி(ப)மார்கல் 6(4)
உட்காக்-அவுட்இல்லை- 3(3)
உதிரிகள் 14
மொத்தம் (50 ஓவரில், 8 விக்.,) 221
விக்கெட் வீழ்ச்சி: 1-5(பிரண்டன்), 2-16(கப்டில்), 3-130(டெய்லர்), 4-153(ஸ்டைரிஸ்), 5-156(ரைடர்), 6-188(நாதன்), 7-204(ஓரம்), 8-210(வெட்டோரி)
பந்துவீச்சு: பீட்டர்சன் 9--0-49-1, ஸ்டைன் 10-0-42-2, போத்தா 9-0-29-0, மார்கல் 8-0-46-3, இம்ரான் தாகிர் 9-0-32-2, காலிஸ் 3-1-6-0, டுமினி 2-0-9-0.
தென் ஆப்ரிக்கா
ஆம்லா(கே)வெட்டோரி(ப)நாதன் 7(5)
ஸ்மித்(கே)கவ்(ப)ஓரம் 28(34)
காலிஸ்(கே)ஓரம்(ப)சவுத்தி 47(75)
டிவிலியர்ஸ்-ரன்அவுட்-(கப்டில்/பிரண்டன்) 35(40)
டுமினி(ப)நாதன் 3(12)
டு பிளசிஸ்(கே)சவுத்தி(ப)ஓரம் 36(43)
போத்தா(ப)ஓரம் 2(10)
பீட்டர்சன்(கே)பிரண்டன்(ப)ஓரம் 0(5)
ஸ்டைன்(கே)ஓரம்(ப)நாதன் 8(18)
மார்கல்(கே)கவ்(ப)உட்காக் 3(17)
இம்ரான் தாகிர்-அவுட்இல்லை- 0(1)
உதிரிகள் 3
மொத்தம் (43.2 ஓவரில், "ஆல்-அவுட்') 172
விக்கெட் வீழ்ச்சி: 1-8(ஆம்லா), 2-69(ஸ்மித்), 3-108(காலிஸ்), 4-121(டுமினி), 5-121(டிவிலியர்ஸ்), 6-128(போத்தா), 7-132(பீட்டர்சன்), 8-146(ஸ்டைன்), 9-172(டு பிளசிஸ்), 10-172(மார்கல்).
பந்து வீச்சு: நாதன் 10-1-24-3, வெட்டோரி 10-0-39-0, சவுத்தி 9-0-44-1, ஓரம் 9-1-39-4, உட்காக் 5.2-0-24-1.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts