தமிழகத்தில் சோனியா, ராகுல் பிரசாரம் செய்யும் முடிவு குறித்து இன்னும் மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கும் வரை யார் வேண்டுமானாலும் போட்டியிட விருப்பம் தெரிவிக்கலாம். ஆனால், கட்சி மேலிடம் ஒருவரை வேட்பாளராக அறிவித்த பின், அவரை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நடப்பது போராட்டம் அல்ல. கட்சி கட்டுப்பாட்டை மீறும் செயல்.
யார் வெற்றி வேட்பாளர் என்ற தகுதியை பார்த்து தான் வேட்பாளர்கள் பட்டியலை சோனியா அறிவித்துள்ளார். மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஜெயந்தியை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் காங்கிரசார் அல்ல. கட்சி கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சத்தியமூர்த்தி பவனை தாக்கியவர்கள் சமூக விரோதிகள். அவர்களுக்கு துணை போன காங்கிரசார் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சோனியா, ராகுல் பிரசாரம் செய்வது குறித்து இன்னும் மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் என்றார்.

0 comments :
Post a Comment