மதுரை: "" ஜெயலலிதா ஆட்சிக்கு வரப்போவதுமில்லை; தங்கம் தரப்போவதுமில்லை,'' என, மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.
மதுரையில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை, கருணாநிதி அவருக்கு எழுதி கொடுத்ததை போல், காப்பி அடித்து வெளியிட்டுள்ளனர். இதற்கு, காரணம் ஜெ.,க்கு தோல்வி பயம் வந்து விட்டது. 2006 தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளும், சொல்லாத திட்டங்களையும் கருணாநிதி நிறைவேற்றியுள்ளார். 2001ல் ஆட்சிக்கு வந்த ஜெ., முந்தைய தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை முடக்கினார். மக்களுக்கு சென்றடையா வண்ணம் தடுத்தார். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் திருமண உதவி திட்டம் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாகவும், கர்ப்பிணிகளுக்கு 6,000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 2011ல் ஜெ., ஆட்சிக்கு வந்தால் 2006ல் தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களை முடக்குவார். கர்ப்பிணிகளுக்கு 6,000 ரூபாய், திருமண உதவி திட்டத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் கூட தரமாட்டார். ஜெயலலிதாவிற்கு நடிப்பதை தவிர ஒன்றும் தெரியாது. தங்கத்தைப் பற்றி கவலையில்லை. அவர், ஆட்சிக்கு வரப்போவதுமில்லை; தங்கம் தரப்போவதுமில்லை,'' என்றார்.

0 comments :
Post a Comment