background img

புதிய வரவு

சினிமாவில் கூட மரக்கன்று நடாத விஜயகாந்த்: ராமதாஸ்

சினிமாவில் நடிப்புக்காக கூட மரக்கன்று நடாத நடிகர் விஜயகாந்த், பசுமை தாயகத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

அணைக்கட்டு தொகுதி பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

தி.மு.க. தேர்தல் அறிக்கையை பெண்களே இன்றைக்கு பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அதனால் கருணாநிதி 6வது முறையாக முதல்வராவது உறுதி.

என்னை அறிக்கை மன்னன், போராட்ட மன்னன் என நடிகர் ஒருவர் (விஜயகாந்த்) விமர்சனம் செய்து வருகிறார். என்னை கொச்சைப்படுத்துவதாக நினைத்து அப்படிப் பேசுகிறார். நான் அறிக்கை மன்னன்தான். சமூக விழிப்புணர்வுக்காக, அடிதட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக அறிக்கை மூலம் குரல் கொடுப்பவன்.

மக்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல நூறு போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்றவன். பாளையங்கோட்டை சிறையைத் தவிர பிற சிறைகளைப் பார்த்தவன். என்னை என் கட்சியினர் போராளி என்று அழைப்பதையே விரும்புபவன். அதனால் என்னை போராட்ட மன்னன் என்று அவர் சரியாகத்தான் கூறியுள்ளார்.

தனது கல்யாண மண்டபத்தை இடித்ததற்காகவும், சினிமா திரையரங்கில் தனது படத்தை திரையிடவும் மட்டுமே போராடிய அவர், மக்களுக்காகப் போராடி எந்த சிறைக்கு சென்றார்?

பசுமை தாயகம் சார்பில் மழைநீர் சேகரிப்புக்காக 600 க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூர் வாரியுள்ளோம். சினிமாவில் நடிப்புக்காக கூட அவர் மரக்கன்று நட்டதில்லை. அப்படிப்பட்டவர் பசுமை தாயகத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts