கொழும்பு: உலக கோப்பை பைனலுக்கு இலங்கை அணி மிகச் சுலபமாக முன்னேறியது. நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சொதப்பலாக ஆடிய நியூசிலாந்து அணி, தொடரில் இருந்து வெளியேறியது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று கொழும்பு, பிரேமதாசா அரங்கில் நடந்த முதலாவது அரையிறுதியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணியில் லூக் உட்காக் நீக்கப்பட்டு, மெக்கே வாய்ப்பு பெற்றார். இலங்கை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. "டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி "பேட்டிங் தேர்வு செய்தார்.
திணறல் துவக்கம்:
நியூசிலாந்து அணி துவக்கத்தில் திணறியது. ஹெராத் பந்தில் ஒரு சிக்சர் அடித்த பிரண்டன் மெக்கலம்(13) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. பின் கப்டில், ஜெசி ரைடர் இணைந்து நிதானமாக ஆடினர். முரளிதரன் சுழலில் ரைடர்(19) வெளியேறினார். மலிங்கா வேகத்தில் கப்டில்(39) காலியானார். இதையடுத்து 3 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
ஸ்டைரிஸ் ஆறுதல்:
இதற்கு பின் ராஸ் டெய்லர், ஸ்டைரிஸ் சேர்ந்து போராடினர். மலிங்கா ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து அசத்தினார் ஸ்டைரிஸ். இந்த நேரத்தில் மெண்டிஸ் வலையில் டெய்லர்(36) சிக்கினார். மலிங்கா பந்தில் வில்லியம்சன்(22) வீழ்ந்தார். முரளிதரன் பந்தில் ஒரு சிக்சர் அடிக்க நாதன் மெக்கலமும்(9) விரைவில் நடையை கட்டினார். அரைசதம் கடந்த நிலையில் ஸ்டைரிஸ்(57), முரளிதரன் பந்தில் அவுட்டாக, ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது. ஓரம்(7) ஏமாற்றினார். "டெயிலெண்டர்கள் மெண்டிஸ் சுழலில் வெளியேற, நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை தரப்பில் மலிங்கா 3, மெண்டிஸ் 3, முரளிதரன் 2 விக்கெட் வீழ்த்தினர்.
தில்ஷன் அபாரம்:
சுலப இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு தரங்கா, தில்ஷன் மீண்டும் முறை அதிரடி துவக்கம் தந்தனர். நாதன் மெக்கலம் வீசிய முதல் ஓவரில் தரங்கா ஒரு சூப்பர் சிக்சர் அடித்தார். தரங்கா 30 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சங்ககரா "கம்பெனி கொடுக்க, தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார் தில்ஷன். அரைசதம் கடந்த இவர் 73 ரன்களுக்கு(10 பவுண்டரி, 1 சிக்சர்), சவுத்தி வேகத்தில் அவுட்டானார். இதற்கு பின் திடீரென சரிவு ஏற்பட்டது. அனுபவ வீரரான ஜெயவர்தனா(1), வெட்டோரி சுழலில் சிக்கினார். மெக்கே பந்தில் சங்ககரா(54) அவுட்டாக, இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்து தவித்தது.
பின் சமரவீரா, சமரசில்வா சேர்ந்து பொறுப்பாக ஆடினர். ரைடர் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த சமரசில்வா பதட்டத்தை போக்கினார். சிறிது நேரத்தில் சில்வா(13), சவுத்தி பந்தில் போல்டாக மீண்டும் "டென்ஷன் ஏற்பட்டது. இருப்பினும் சவுத்தி ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த மாத்யூஸ் நம்பிக்கை அளித்தார். மறுபக்கம் மெக்கே பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சமரவீரா வெற்றியை உறுதி செய்தார். இலங்கை அணி 47.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்து சுலபமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது. நியூசிலாந்து அணி மீண்டும் ஒரு முறை அரையிறுதியுடன் வெளியேறி, ஏமாற்றம் அளித்தது.
ஆட்ட நாயகன் விருதை சங்ககரா வென்றார்.
இன்றைய இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அரையிறுதியில் வெற்றி பெறும் அணியுடன், வரும் ஏப்.,2ம் தேதி நடக்கும் பைனலில் இலங்கை அணி விளையாடும்.
கடைசி போட்டி
இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், உலக கோப்பை தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். நேற்று கொழும்புவில், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் விளையாடிய இவர், சொந்த மண்ணில் தனது கடைசி போட்டியில் பங்கேற்றார். இப்போட்டியில் தனது 10வது ஓவரின் கடைசி பந்தில் நியூசிலாந்தின் ஸ்காட் ஸ்டைரிசை அவுட்டாக்கினார். இதேபோல காலேயில், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர், கடைசி பந்தில் பிரக்யன் ஓஜாவை வெளியேற்றினார். வரும் ஏப்.2ல் மும்பையில் நடக்கவுள்ள பைனல், இவரது கடைசி ஒருநாள் போட்டி.
மூன்றாவது முறை
நேற்று நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், இலங்கை அணி உலக கோப்பை அரங்கில் மூன்றாவது முறையாக (1996, 2007, 2011) பைனலுக்கு முன்னேறி உள்ளது. இதில் கடந்த 1996ல் கோப்பை வென்ற இலங்கை அணி, 2007ல் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது.
---
தொடரும் சோகம்
நியூசிலாந்து அணியின் "அரையிறுதி சோகம் தொடர்கிறது. நேற்று இலங்கைக்கு எதிராக தோல்வி அடைந்ததன்மூலம், உலக கோப்பை அரங்கில் ஆறாவது முறையாக (1975, 79, 92, 99, 2007, 2011) அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது.
---
ஸ்கோர் போர்டு
நியூசிலாந்து
கப்டில்(ப)மலிங்கா 39(65)
பிரண்டன்(ப)ஹெராத் 13(21)
ரைடர்(கே)சங்ககரா(ப)முரளிதரன் 19(34)
டெய்லர்(கே)தரங்கா(ப)மெண்டிஸ் 36(55)
ஸ்டைரிஸ்-எல்.பி.டபிள்யு.,(ப)முரளிதரன் 57(77)
வில்லியம்சன்-எல்.பி.டபிள்யு.,(ப)மலிங்கா 22(16)
நாதன்(கே)சங்ககரா(ப)மலிங்கா 9(9)
ஓரம்(கே)ஜெயவர்தனா(ப)தில்ஷன் 7(9)
வெட்டோரி-அவுட்இல்லை- 3(3)
சவுத்தி(கே)சங்ககரா(ப)மெண்டிஸ் 0(3)
மெக்கே(ப)மெண்டிஸ் 0(2)
உதிரிகள் 12
மொத்தம் (48.5 ஓவரில், "ஆல்-அவுட்) 217
விக்கெட் வீழ்ச்சி: 1-32(பிரண்டன்), 2-69(ரைடர்), 3-84(கப்டில்), 4-161(டெய்லர்), 5--192(வில்லியம்சன்), 6-204(நாதன்), 7-213(ஸ்டைரிஸ்), 8-215(ஓரம்), 9-217(சவுத்தி), 10-217(மெக்கே).
பந்துவீச்சு: மலிங்கா 9-0-55-3, ஹெராத் 9-1-31-1, மாத்யூஸ் 6-0-27-0, மெண்டிஸ் 9.5-0-35-3, முரளிதரன் 10-1-42-2, தில்ஷன் 5-0-22-1.
இலங்கை
தரங்கா(கே)ரைடர்(ப)சவுத்தி 30(31)
தில்ஷன்(கே)ரைடர்(ப)சவுத்தி 73(93)
சங்ககரா(கே)ஸ்டைரிஸ்(ப)மெக்கே 54(79)
ஜெயவர்தனா-எல்.பி.டபிள்யு.,(ப)வெட்டோரி 1(3)
சமரவீரா-அவுட்இல்லை- 23(38)
சில்வா(ப)சவுத்தி 13(25)
மாத்யூஸ்-அவுட்இல்லை- 14(18)
உதிரிகள் 12
மொத்தம் (47.5 ஓவரில், 5 விக்.,) 220
விக்கெட் வீழ்ச்சி: 1-40(தரங்கா), 2-160(தில்ஷன்), 3-161(ஜெயவர்தனா), 4-169(சங்ககரா), 5-185(சில்வா).
பந்துவீச்சு: நாதன் 6-0-33-0, சவுத்தி 10---2-57-3, வெட்டோரி 10-0-36-1, ஓரம் 8-1-29-0 மெக்கே 9.5-1-37-1, ஸ்டைரிஸ் 2-0-12-0, ரைடர் 2-0-14-0.

0 comments :
Post a Comment