மொகாலி: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும், உலக கோப்பை அரையிறுதி போட்டியில் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும், சூதாட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 30ம் தேதி, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு உலக கோப்பை அரையிறுதி போட்டி, கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டிக்கெட்டின் விலை, தற்போதைய நிலையில் 8 முதல் 10 மடங்கு வரை அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், புக்கிகளும் பெரிய அளவில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தியவுடனே, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்த, சூதாட்டம் அதிகரித்துவிட்டது. ஆனால், இவர்களால் எந்த அணி வெல்லும் என்று உறுதியாக கணிக்க முடியவில்லை.
இதனால் இரு அணிகளுக்கும் 90 பைசா என்ற அளவில் தற்போதைய "ரேட்டிங்' உள்ளது. இதுகுறித்து சூதாட்டத்தில் ஈடுபடும் சீனியர் புக்கி ஒருவர் கூறுகையில்,"" இரு அணிகளும் சமபலத்தில் உள்ளன. இதனால் இந்த "ரேட்டிங்கில்' மாற்றம் ஏற்படும்,'' என்றார்.
இந்த மிகப்பெரிய சூதாட்டத்தில், சர்வதேச நிழல் உலக தாதா நேரடியாக ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் தங்கியிருப்பதாக கருதப்படும், இவரது ஆட்கள் தான் இந்த வேலையில் இறங்கியுள்ளனர் என, நன்கு தெரிந்த புக்கிகள் கூறுகின்றனர். இதுகுறித்து மற்றொரு புக்கி கூறுகையில்,"" இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தால், இதில் "டி' கம்பெனியின் பின்னணி இருப்பதை மறுக்க முடியாது,'' என்றார்.
இதில் பெரும்பணத்தை முதலீடு செய்ய, இந்தியாவுக்கு வெளியில் இருந்து செயல்படும், ஹவாலா ஆசாமிகள் முன்வந்துள்ளனர் என தெரிகிறது. இருப்பினும் பெரும்பாலான புக்கிகள், பாகிஸ்தானில் இருந்து துபாய் சென்று செயல்படவுள்ளதாக தெரிகிறது. ஏனெனில், இங்குள்ள "கிளப்' தான் இதுபோன்ற நேரங்களில், மிகப்பெரிய பண பரிவர்த்தனையில் ஈடுபடுகிறது.
இருப்பினும், இந்த சூதாட்டத்தைத் தடுக்க போலீசார் மிகப்பெரிய அளவில், முயற்சி எடுத்து வருகின்றனர். இதுகுறித்து மொகாலி போலீசின் இணைக்கமிஷனர் ஹிமன்சு ராய் கூறுகையில்,"" கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் புக்கிகள் மற்றும் தரகர்களை கைது செய்ய தீவிர முயற்சி செய்து வருகிறோம்,'' என்றார்.

0 comments :
Post a Comment