திமுக தேர்தல் அறிக்கையை மக்கள் நம்புகிறார்கள் என்றும், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.
மத்திய அமைச்சரும், தென்மண்டல தி.மு.க. அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி தூத்துக்குடி மீனாட்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைமை தேர்தல் அலுவலகத்துக்கு சென்றார்.
அங்கு தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தி.மு.க. வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி,
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். 2006 ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேர்தல்
அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போல் இந்த முறையும் தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள். தென்மாவட்டத்தில் 52 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பெ.கீதாஜீவன் 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.

0 comments :
Post a Comment