background img

புதிய வரவு

பொன்னர் சங்கர்... பிரமிக்க வைக்கும் இயக்குநர் தியாகராஜன்!

பொன்னர் சங்கர் படத்தின் சில காட்சிகள் மற்றும் மூன்று பாடல்கள் நேற்று திரையிடப்பட்டன. இந்தக் காட்சிகளைப் பார்த்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கைதட்டி இயக்குநர் தியாகராஜனுக்கும் நடிகர் பிரசாந்துக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

முதல்வர் மு கருணாநிதி எழுதிய பிரமாண்ட நாவல் பொன்னர் சங்கர். எண்பதுகளில் வெளியாகி, விற்பனையில் பெரும் சாதனைப் படைத்தது. இலக்கிய உலகில் தனியிடம் பிடித்த இந்த நாவலை, அதே பெயரில் இரு ஆண்டுகளுக்கு முன் படமாக்க ஆரம்பித்தார் இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜன்.

தியாகராஜன் இயக்குகிறார் என்றதும் ஆரம்பத்தில் யாருக்கும் பெரிய அபிப்பிராயம் இல்லாமல் இருந்தது. அவர்களையெல்லாம் திகைத்து திக்குமுக்காட வைத்துவிட்டார் தியாகராஜன் நேற்று. அனைவரும் அவரைத் தனித்தனியாக சந்தித்து, எப்படி சார் இப்படி படமாக்கினீர்கள் என்று வியந்தனர்.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைப்பது போல, "பொன்னர் சங்கரை இத்தனை அழகாகப் படமாக்கிய தியாகராஜனின் கைகளுக்கு முத்தமிடலாம். அத்தனை சிறப்பாக நடித்துள்ள பிரசாந்த் கன்னங்களில் அந்த முத்தத்தை பரிசாகத் தரலாம்," என்று கூறியிருந்தார். காரணம் அவருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் மட்டும் 2.30 மணி நேரம் ஓடக்கூடிய காட்சிகளை முழுமையாகப் போட்டுக் காட்டிவிட்டார் தியாகராஜன்.

சமீப காலத்தில், கருணாநிதி எழுதிய கதை திரைக்கதை வசனத்தை, மிக அழகாக படமாக்கிய ஒரே இயக்குநர் தியாகராஜன்தான் என்று வந்திருந்த அனைவரும் வெளிப்படையாகவே கூறியது குறிப்பிடத்தக்கது.

படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இவர்களில் ராஜ்கிரண், நெப்போலியன் போன்றவர்களின் தோற்றமும் நடிப்பும் கம்பீரத்துக்கு உதாரணமாகத் திகழ்ந்தது.

பொன்னர் சங்கரில் தியாகராஜனுக்கு நிகரான பிரமாண்டத்தை தன் இசையால் காட்டியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. திரையிடப்பட்ட மூன்று பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் ரகமாக இருந்தன. குறிப்பாக இந்தப் பாடல்களின் இசை கிறங்கடித்தது. அத்தனை அற்புதமான இசைக் கோர்வையைத் தந்துள்ளார் ராஜா.

மும்பை ஸ்டுடியோ ஒன்றில் இந்தப் படத்தின் இசைச் சேர்ப்பு நடந்து கொண்டிருந்தபோது, படத்தின் காட்சிகளைப் பார்த்த மும்பை இயக்குநர்கள் சிலர், இந்தியில் வெளியான ஜோதா அக்பரை விட தரத்திலும் உருவாக்கத்திலும் மிகச் சிறப்பாக வந்துள்ளது பொன்னர் சங்கர் என கூறியதாக இளையராஜா தெரிவித்தார்.

அந்த வார்த்தைகள் உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை என்று நிரூபித்துள்ளார் தியாகராஜன்!

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts