background img

புதிய வரவு

பால் பணியாரம்

தேவையானவை:

பச்சரிசி - 2 ஆழாக்கு
உளுந்தம் பருப்பு - 2 ஆழாக்கு
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய் - 10
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சரியையும், உளுந்தம் பருப்பையும் இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதனை கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.

மாவு கெட்டியாக இருக்க வேண்டும். மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாகப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து பாலை ஊற்றி நன்றாகக் காய்ச்சவும். பாலுடன் சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்க்கவும்.

பணியாரங்களை இளஞ்சூடாக இருக்கும்போதே பாலில் சேர்த்து ஊற வைக்கவும்.

அதிக நேரம் ஊறவிடக்கூடாது. அப்போதுதான் பணியாரம் உதிர்ந்துவிடாமல் சாப்பிட நன்றாக இருக்கும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts