தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 8 1/2 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ்நாட்டில் இன்று தொடங்கி ஏப்ரல் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 8,922 பள்ளிகளில் இருந்து சுமார் 8 லட்சத்து 57 ஆயிரத்து 956 மாணவ-மாணவிகள் பரீட்சை எழுதுகிறார்கள். இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 மாணவர்களும், 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 மாணவிகளும் ஆவார்கள்.
தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 7 லட்சத்து 54 ஆயிரத்து 679 ஆகும். தனித்தேர்வர்கள் 97 ஆயிரத்து 655 பேர் தேர்வு எழுதுகிறார்கள். சென்னையில் 272 பள்ளிகளில் இருந்து 36,148 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதில் 17,124 மாணவர்களும், 19,024 மாணவிகளும் ஆவார்கள். புதுச்சேரியில் மொத்தம் 226 பள்ளிகளில் இருந்து 47 தேர்வு மையங்களில் 15,529 பேர் பரீட்சை எழுதுகின்றனர். 7,532 மாணவர்களும், 7,997 மாணவிகளும் ஆவர்.
இன்று தமிழ் முதல் தாள், நாளை 29-ந்தேதி தமிழ் இரண்டாம் தாள், 31-ந்தேதி (வியாழக்கிழமை) ஆங்கிலம் முதல் தாள், 1-ந்தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், 5-ந்தேதி கணித தேர்வும், 8-ந்தேதி அறிவியலும், 11-ந் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறுகிறது. இதே போல ஒ.எஸ்.எல்.சி. தேர்வும் இன்று தொடங்கி 11-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வினை 1,561 பேர் எழுதுகிறார்கள். தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments :
Post a Comment