background img

புதிய வரவு

பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்

நாம் அன்றாடம் குடிக்கும் ‘டீ’யில் ‘தீபிளேவின்ஸ்’ ‘தெருபிகின்ல்’ என்ற ஆண்டி ஆக்சிடெண்ட் வேதிப் பொருள் உள்ளது. இதன் மூலம் உடல் எடை குறையும் என்ற கருத்து நிலவி வந்தது. தற்போது பால் கலக்காத டீ குடித்தால்தான், உடல் எடை குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அசாமில் உள்ள டீ ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த தேவஜித் போர்தகுர் என்ற நிபுணர் இந்த ஆய்வை மேற்கொண்டார். பசும் பாலில் கொழுப்பு சத்து உள்ளது. அதை டீயில் கலக்கும் போது தீபிளேவின்ஸ், தெரு பிகின்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடெண்ட்கள் பால் புரோட்டீனை ஏற்படுத்துகின்றன.

இதனால் டீயில் கொழுப்புசத்து அதிகரிக்கும். எனவே, உடல் எடை குறையும் வாய்ப்பு ஏற்படாது. அதே வேளையில் பால் கலக்காத டீ குடிப்பதன் மூலம் கொழுப்பு சத்து அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மிகவும் கொழுத்த எலிகளுக்கு பால் கலக்காத டீயை கொடுத்து இந்த ஆய்வை மேற்கொண்டார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts