உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரை இறுதிப்போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது. இதில் இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
அதன் படி தொடக்க வீரர்களாக குப்தில், மேக்குல்லம் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். 8-வது ஓவரில் நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நிதானமாக விளையாடி வந்த மேக்குல்லம் 13 ரன்கள் எடுத்திருந்தபோது ஹெராத் பந்தில் போல்டு ஆனார்.
அப்போது ஸ்கோர் 1 விக்கெட்டை இழந்து 32 ரன்கள் எடுத்தது.
பின்னர் களம் இறங்கிய ரைடர் 19 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்தாக வந்த டெய்லர் குப்திலுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வந்தார். சிறப்பாக விளையாடி வந்த குப்தில் மலிங்கா பந்தில் போல்டு ஆனார். அவர் 39 ரன்கள் எடுத்தார். அதன் பின் வந்த ஸ்டைரிஸ் டெய்லருடன் ஜோடி சேர்ந்தார் இருவரும் இலங்கை பந்து வீச்சை நிதானமாக எதிர்கொண்டு விளையாடி வந்தனர். 24 ஓவர்களில் நியூசிலாந்து 3 விக்கெட் பறிகொடுத்து 90 ரன்கள் எடுத்தது. டெய்லர் 14 ரன்னுடனம் ஸ்டைரிஸ் 5 ரன்னுடனும் களத்தில் விளையாடி வருகிறார்கள்.

0 comments :
Post a Comment