வருகிற தேர்தலில் ஜெயலலிதா ஜெயிக்கப்போவது இல்லை என, நடிகை குஷ்பு பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் க.விஜயனை ஆதரித்து நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி, கொசவப்பட்டி ஆகிய இடங்களில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் நடிகை குஷ்பு பேசினார். அவர் கூறியதாவது:
வருகிற தேர்தலில் ஜெயலலிதா ஜெயிக்கப்போவது இல்லை. அவர் வெற்றி பெற்றால் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்துக்கு 4 ஆடுகள், 2 மாடுகள் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் 30 லட்சம் குடும்பத்தினர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளனர். இவர்களுக்கு கொடுப்பதற்கு சுமார் 11/4 கோடி ஆடுகளும், 60 லட்சம் மாடுகளும் தேவையாக உள்ளது.
இந்தியா முழுவதிலும் இந்த எண்ணிக்கையில் ஆடு, மாடுகள் இல்லை. மேஜிக் மூலமாக தான் ஆடு, மாடுகளை அவர் கொண்டு வருவார். தி.மு.க. தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் காப்பியாக, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை உள்ளது. இதை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்.
தமிழக மக்கள் முன்னேற வேண்டும், தமிழகத்தில் அடுத்த தலைமுறையினர் டாக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்பதற்காகவும் கிராமங்களில் பள்ளிகளையும், மாவட்டந்தோறும் கல்லூரிகளையும் கலைஞர் திறந்து வருகிறார்.
ஆனால் மக்களை படிக்க விடக்கூடாது, சுயமாக சிந்திக்கக்கூடாது என்பதற்காக ஆடு, மாடுகளை தருவதாக ஜெயலலிதா கூறுகிறார். திட்டங்களை சொல்லி நாங்கள் ஓட்டு கேட்கிறோம். ஆனால் திட்டி, திட்டி அந்த அம்மா ஓட்டு கேட்கிறார். மக்கள் அவரை நம்ப தயாராக இல்லை.
6வது முறையாக தலைவர் முதல் அமைச்சரானால், இந்தியாவில் மட்டுமல்லாமல், ஆசியாவிலேயே மிகப்பெரிய சாதனையாக அமையும். அந்த பெருமை நமக்கு கிடைக்க வேண்டும். இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.

0 comments :
Post a Comment