background img

புதிய வரவு

பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது: உள்துறை மந்திரி எச்சரிக்கை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வருகிற 30-ந்தேதி மோதுகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அந்த நாட்டு உள்துறை மந்திரி ரகுமான்மாலிக் எச்சரித்து உள்ளார்.

உலக கோப்பையில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். தற்போது அணி வீரர்கள் மீது எந்தவித புகாரும் இல்லை. அதே நிலை நீடிக்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது. வீரர்களின் நடவடிக்கை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. வீரர்கள் மேட்ச் பிக்சிங் என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். லண்டனில் நடந்த மாதிரி நடக்கக்கூடாது என்பதற்காக வீரர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் மீது அளவு கடந்த அன்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

மக்களுக்கு ஏமாற்றம் அளிக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருப்பதாகவும், 1000 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு இருப்பதாகவும் சிதம்பரம் தெரிவித்து இருக்கிறார். அவர் திறமை மிக்கவர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் சிறப்பாக கவனிக்கக் கூடியவர்.

இவ்வாறு பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts