background img

புதிய வரவு

ஸ்பெக்ட்ரம் வழக்கு: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரிப்பு பணி முடிந்தது; ஆதாரங்களுடன் கோர்ட்டில் தாக்கலாகிறது

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா அவரது உதவியாளர் சந்தோலியா, தொலை தொடர்பு முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் உஸ்மான் பல்வா ஆகிய 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சிபிஐ அழைத்து விசாரித்தது. 2 தொலை தொடர்பு நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் மார்ச் 31-ந் தேதிக்குள் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும் என்று சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் விசாரணை இன்னும் முடிவடையாததால் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ முடிவு செய்தது. அந்த குற்றப்பத்திரிகையை தயார் செய்யும் பணியில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

தற்போது முதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு பணி முடிந்துவிட்டது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு இந்த குற்றப் பத்திரிகையை ஓரிரு நாட்களில் தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது. முதல் குற்றப்பத்திரிகையில் யார், யார் பெயர் இடம் பெற்றிருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கைதான 4 பேரின் பெயர் இடம்பெறும் என்பது உறுதி ஆகி உள்ளது. அவர்களுக்கு உதவியதாக மேலும் சிலரது பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தபிறகு தொடர்ந்து விசாரணை நடைபெறும். செவ்வாய்க்கிழமை இந்த விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வர்களின் பெயர்களுடன், அவர்களுக்கும் ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கும் உள்ள தொடர்பை உறுதிபடுத்தும் ஆவணங்களும் இடம் பெற்றிருக்கும். ஆனால் எத்தனை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்பது குற்றப்பத்திரிகையில் இடம் பெறாது.

ஸ்பெக்ட்ரம் நிதி இழப்பு குறித்து டிராய் அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. அந்த அமைப்பின் முடிவுக்குப்பிறகே இழப்பு குறித்து இறுதி முடிவு எடுத்து குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts