background img

புதிய வரவு

உலக் கோப்பை அரையிறுதியைக் காண வருகிறார் பாக். பிரதமர் கிலானி

இஸ்லாமாபாத்: வரும் 30-ம் தேதி மொஹாலியில் இந்தியா-பாகிஸ்தான் அணிக்களுக்கிடையேயான அறையிறுதிப் போட்டியைக் காண பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி இந்தியா வருகிறார்.

கிரிக்கெட் உலக்கோப்பையின் அரையிறுதியாட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த போட்டி வரும் 30-ம் தேதி மொஹாலியில் நடக்கிறது. இதைக் காண வருமாறு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானிக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல அதிபர் சர்தாரிக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தியாவுக்கு செல்வதா, வேண்டாமா என்பது தொடர்பாக கிலானி சர்தாரியை சந்தித்து பேசினார். நேற்று நள்ளிரவில் தொடங்கிய இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது.

இறுதியில் கிலானி இந்தியாவுக்கு சென்று அரையிறுதிப் போட்டியைக் காண்பது என்று முடிவு எடுக்கப்பட்டதாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் பர்ஹத்துல்லா பாபர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு மறைந்த சர்வாதிகாரி ஜியா உல் ஹக், இந்தியாவின் அழைப்பை ஏற்று இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைக் காண வந்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts