கோல்கட்டா: "பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த ஊரில் விளையாட இருப்பதால் யுவராஜ் சிங் "கூலாக இருக்க வேண்டும், என, முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி "அட்வைஸ் செய்துள்ளார்.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடக்கிறது. மொகாலியில் நாளை நடக்கவுள்ள அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி யுவராஜ் சிங் பிறந்த ஊரான சண்டிகரில் உள்ள மொகாலி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது.
இதுகுறித்து, கடந்த 2003ல் இந்திய அணியை பைனலுக்கு அழைத்துச் சென்ற முன்னாள் கேப்டன் கங்குலி கூறியதாவது: இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி, இரு அணியினருக்கும் மிக முக்கியமான ஒன்று. இப்போட்டியில் இந்திய வீரர்களுக்கு சற்று நெருக்கடி அதிகமாக இருக்கும். ஏனெனில் சொந்த மண்ணில், உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாட இருப்பதால் இந்திய வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. முழுதிறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.
சொந்த ஊரில் விளையாட உள்ள யுவராஜ் சிங் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் வரும் போது "கூலாக களமிறங்க வேண்டும். ஏனெனில் உள்ளூர் ரசிகர்கள் இவரிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்பார்கள். ஆனால் இதுகுறித்து சிந்திக்காமல், இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதுமானது. இதுவரை சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ள இவர், முக்கியமான அரையிறுதியிலும் கைகொடுப்பார் என நம்புகிறேன்.
இவ்வாறு கங்குலி கூறினார்.

0 comments :
Post a Comment