டோக்கியோ:ஜப்பானின் புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில், 3ம் உலையில் மிகவும் மோசமாக சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில், அங்கு நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.புக்குஷிமா டாய் இச்சியின் 3ம் உலையில் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று ஊழியர்களின் காலில், கதிர்வீச்சு கலந்த நீர் பட்டதால், கதிர்வீச்சு தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்களில் இருவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த 3ம் உலையில்தான், யுரேனியத்தோடு புளுட்டோனியமும் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியத்தை விட புளுட்டோனியம் மிகுந்த நச்சுப் பொருள் என்பது குறிப்பிடத் தக்கது. 3ம் உலையில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சு கலந்த நீரைப் பரிசோதித்ததில், அதில் இயல்பை விட 10 ஆயிரம் மடங்கு அதிகமாக, கதிர்வீச்சு கலந்திருப்பது தெரியவந்தது. நான்கு உலைகளிலும், இதுவரை செலுத்தப்பட்டு வந்த கடல்நீர் நிறுத்தப்பட்டு, புதிய நீரை உட்செலுத்தும் பணி நேற்று முதல் நடந்து வருகிறது. நான்கு உலைகளிலும், 700 பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் 24 மணிநேரமும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது புக்குஷிமாவைச் சுற்றி மிக அருகில் வசிப்பவர்கள் மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 30 கி.மீ., சுற்றளவை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்தார்.ஏற்கனவே பாதிக்கப்பட்ட மூன்று பணியாளர்களைத் தவிர, வேறு எவரும் ஜப்பானில் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதேநேரம், ஜப்பானில் இருந்து சீனாவுக்குச் சென்ற இருவர், மிக மோசமாக கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இருவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
10 ஆயிரம் பேர் பலி:நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்து விட்டது. 17 ஆயிரத்து 440 பேர் காணாமல் போயுள்ளனர். இரண்டாயிரத்து 775 பேர் காயம் அடைந்துள்ளனர்.சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஹாங்காங், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள், ஐப்பான் உணவுப் பொருட்கள் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளன. இவ்வரிசையில் தற்போது சீனாவும் சேர்ந்துள்ளது.

0 comments :
Post a Comment