background img

புதிய வரவு

ஸ்பெக்ட்ரம் விவகாரம்-ஜேபிசி தலைவராக காங்கிரஸின் பி.சி.சாக்கோ நியமனம்

டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விசாரிக்கவுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராக, சோனியா காந்தியின் தீவிர விசுவாசியும், காங்கிரஸ் எம்.பியுமான, கேரளாவைச் சேர்ந்த பி.சி.சாக்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையை ஏற்று, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மொத்தம் 30 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 20 பேர் லோக்சபா உறுப்பினர்கள், 10 பேர் ராஜ்யசபா உறுப்பினர்கள்.

இந்தக் குழுவின் தலைவராக தற்போது பி.சி.சாக்கோ அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. தீவிர சோனியா காந்தி விசுவாசி. இவரையே தற்போது தலைவராக்கியுள்ளனர்.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முழு விவரம்:

லோக்சபா உறுப்பினர்கள்- பி.சி.சாக்கோ (தலைவர்), கிஷோர் சந்திர தியோ, பபன் சிங் கோட்டவார், ஜெய் பிரகாஷ் அகர்வால், தீபீந்தர் சிங் ஹூடா, மணீஷ் திவாரி, நிர்மல் காத்ரி, அதிர் ரஞ்சன் செளத்ரி (அனைவரும் காங்.), ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, ஹரீன் பதக், கோபிநாத் முண்டே (பாஜக), டி.ஆர்.பாலு (திமுக), கல்யாண் பானர்ஜி (திரினமூல் காங்), சரத்யாதவ் (ஐக்கிய ஜனதாதளம்), தாரா சிங் செளகான் (பகுஜன் சமாஜ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி கட்சி), குருதாஸ் தாஸ் குப்தா (சிபிஐ), அர்ஜூன் சரண் சேத்தி (பிஜூ ஜனதாதளம்), தம்பித்துரை (அதிமுக)

ராஜ்யசபா உறுப்பினர்கள் - ஜெயந்தி நடராஜன், பி.ஜே. குரியன், பிரவீன் ராஷ்டிர பால் (காங்.), சீதாராம் எச்சூரி (சிபிஎம்), திருச்சி சிவா (திமுக), எஸ்.எஸ்.அலுவாலியா, ரவி சங்கர் பிரசாத் (பாஜக), ஒய்.பி. திரிவேதி (தேசியவாத காங்கிரஸ்), சதீஷ் சந்திர மிஷ்ரா (பகுஜன் சமாஜ்), ராமச்சந்திர பிரசாத் சிங் (ஐக்கிய ஜனதாதளம்)

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts