background img

புதிய வரவு

டாடா தலைமை அலுவலகத்தில் பயங்கர தீ... 3 பேர் பலி!

மும்பை: மும்பை துறைமுகம் அருகே உள்ள டாடா நிறுவனத்தின் தலைமை அலுவலகமான பாம்பே ஹவுசில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த 4 மாடி கட்டிடம் 1924ம் ஆண்டு பிரிட்டிஷாரால் கட்டப்பட்டது.

இன்று காலை இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.அது கீழ் பகுதி முழுவதும் பரவியது. 10 தீயணைப்பு வண்டிகள் வந்து நீண்டநேரம் போராடி தீயை அணைத்தன.

இந்த தீ விபத்து காலை 9.30 மணிக்கு ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து மும்பை தலைமை தீயணைப்பு அலுவலர் தத்கரே கூறுகையில், இந்த விபத்தில் பாம்பே ஹவுஸின் அடித்தளத்தில் 4 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களில் ஒருவரை மட்டுமே உயிருக்கு ஆபத்தான நிலையில் காப்பாற்ற முடிந்தது. மற்ற மூவர் இறந்துவிட்டனர். மேலும் இருவரை பத்திரமாக காப்பாற்றிவிட்டோம், என்றார்.

காயமடைந்தவர்களுக்கு சர் ஜேஜே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக, பாம்பே ஹவுஸ் இருக்கும் பகுதி முழுக்க சீல் வைக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts