நாடாராளுமன்றம் என்ற ஜனநாயக அமைப்பு மிக மிக முக்கியப் பிரச்சனைகளைப் பற்றி விவாதம் செய்யவும், சட்டம் இயற்றவும் மட்டும்தான் உருவாக்கப்பட்டது. தவறு செய்திருந்தால் சட்டப்படி ஆய்வு செய்து தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் பொறுப்பு. நாடாளுமன்றமே புலனாய்வு செய்து தண்டனை வழங்கலாம் என்று எதிர்க்கட்சிகள் எண்ணுவது தவறு என்று ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கைக்கு திமுக பதிலளித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் அது குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
இதை மத்திய அரசு ஏற்க மறுத்ததால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் முழுவதும் முடங்கியது. இதேபோல் வரும் 21ம் தேதி தொடங்க இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரையும் முடக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவும், பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தவும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டினார்.
இக் கூட்டத்தில் திமுக டி.ஆர்.பாலு எம்.பி. பேசுகையில், நாடாளுமன்றத்தில் சென்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்ட சில பிரச்சனைகள், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கு விடவேண்டும் என்ற வேண்டுகோள், ஆளுங்கட்சியினரால் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் மீண்டும் எதிர்க்கட்சிகள் நாடாமன்றத்தை முடக்கினால் தவறான விளைவுகள் ஏற்படும்.
ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நாடாளுமன்றத்தை கூட்டியிருப்பது, தேசத்தின் நிதி நிலை அறிக்கையை விவாதிப்பதற்கும், அந்த அடிப்படையில் மிக மிக முக்கியப் பிரச்சனைகளில் முடிவுகளை எடுப்பதற்கும், நிதி மசோதாவை நிறைவேற்றிட முன்னுரிமை அளிப்பதற்கும் மட்டுமே என்பதை இங்கு யாரும் மறுக்க முற்படமாட்டார்கள்.
அப்படி பொறுப்போடு சிந்திக்கும் நாம் அனைவரும் முதலில் நிதிநிலை அறிக்கைக்கு முன்னுரிமை தந்து நிதி மசோதாவை நிறைவேற்றிவிட்டபின் மற்ற பிரச்சினைகளுக்கு இடமளிக்கலாம். எந்த காரணத்தை முன்னிட்டும் நிதி நிலை விவாதம் பின்னுக்குத் தள்ளப்படுவதை தி.மு.க. எதிர்க்கும். நிதி மசோதா நிறைவேறாவிட்டால், அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிவிடும் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் போன்ற அரசு அமைப்புகளும், நாடாளுமன்றத்தின் துணை அமைப்பான பொதுக்கணக்கு குழுவும் அலைக்கற்றை பிரச்சினை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டிருப்பது மட்டுமின்றி, உச்சநீதிமன்றமே நேரிடையாக அதனைக் கண்காணிக்கின்றபோது, நாடாளுமன்ற கூட்டுக்குழுவும் இந்த பிரச்சனையில் ஈடுபடுவது தேவையற்றதாகும். அதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேரத்தையும், அதற்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளையும் தவிர்க்கலாம் அல்லவா?.
பொது கணக்குக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டபின், இந்த பிரச்சினை குறித்து மீண்டும் கூடி முடிவு செய்யலாம் என்பது தி.மு.கவின் கருத்தாகும்.
நாடாராளுமன்றம் என்ற ஜனநாயக அமைப்பு மிக மிக முக்கியப் பிரச்சனைகளைப் பற்றி விவாதம் செய்யவும், சட்டம் இயற்றவும் மட்டும்தான் உருவாக்கப்பட்டது. தவறு செய்திருந்தால் சட்டப்படி ஆய்வு செய்து தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் பொறுப்பு.
நாடாளுமன்றம் புலனாய்வு செய்து தண்டனை வழங்கலாம் என்று எதிர்க்கட்சிகள் எண்ணுவது தவறு என்பதை சுட்டிக்காட்டி, அரசு தரப்பில் எடுக்கப்படும் எந்த முடிவினையும் தி.மு.க. ஆதரிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அதே போல பிற கட்சியினரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்த பின் பேசிய பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்ற கூட்டுக் குழுவை (ஜேபிசி) அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொள்ளும் என்றரீதியில் கருத்துத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment