காவலன் படத்திற்காக அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்பட்டதில் ரொம்பவே தில் ஏறிப் போயிருக்கிறது இளைய தளபதிக்கு. ஆளும் கட்சியை கை நீட்டி குற்றம்சாற்றியதோடு அரசியலில் கண்டிப்பாக நுழைவேன் என கட்டியமும் கூறியிருக்கிறார். அதற்கான அஸ்திவாரம் வரும் 22ஆம் தேதி பலமாகப் போடப் போகிறார், மீனவர்களின் துணையுடன்.
ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்ற பிறகும் சுரணையற்றுக் கிடக்கின்றன மத்திய, மாநில அரசுகள். தந்தி அனுப்பறோம், தூதரை கண்டித்தோம் என்பது போன்ற இவர்களின் கண் துடைப்பு நாடகங்கள்தான் நடக்கின்றன. ஈழமும், மீனவனும் அரசியல்வாதிகளுக்கும், அரசியல்வாதியாக ஆசைப்படுகிறவர்களுக்கும் தேவைப்படும் போது கையிலெடுக்க பயன்படும் ஆயுதம்.
விஜயக்கும் காவலனுக்கு பழிவாங்க மீனவன் கிடைத்திருக்கிறான். வருகிற 22ஆம் தேதி மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாகப்பட்டினத்தில் நடத்தப்படும் பேரணியில் விஜய் கலந்து கொள்கிறார். மீனவன் சாவை கண்டு கொள்ளாத காங்கிரஸ் கட்சியில் இணைய ராகுல் காந்தியை சந்தித்தவர்தான் விஜய் என்பதும், அப்போதும் மீனவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள் என்பதும் அன்று குரல் கொடுக்காதவர் சொந்தப் பிரச்சனை வந்ததும் மத்திய மாநில அரசுகளை மிரட்ட மீனவர் பிரச்சனையை கையிலெடுத்திருக்கிறார் என்பதும்.....
ஒருபோதும் மறக்கக் கூடிய விஷயங்களல்ல.

0 comments :
Post a Comment