சிம்புதேவனின் புதிய படத்தில் தனுஷ் நடிப்பதாக செய்திகள் வந்தது நினைவிருக்கும். லேட்டஸ்ட் தகவல், தனுஷுக்குப் பதில் சிம்பு நடிக்கிறாராம்.
முதலில் ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்வதும், பிறகு அவருக்குப் பதில் வேறொருவரை நடிக்க வைப்பதும் திரையுலகில் சகஜம். இதில் ஏது வம்பு இருக்கப் போகிறது? ஆனால் படத்துக்கு உலகம் என்ற டைட்டிலை வைத்திருப்பதாக கசிந்துள்ள தகவல்தான் வேறு மாதிரி எண்ண வைக்கிறது.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு சிம்பு லிங்குசாமியின் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் விஜய்க்கு கதை சொல்லிய லிங்கு ஆர்யாவை வைத்து வேட்டை என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். இதனை அறிக்கை மூலம் கண்டித்த சிம்பு உடனடியாக வேட்டை மன்னன் என்ற பெயரில் ஒரு படத்தை அறிவித்தார்.
இதேதான் சிம்புதேவன் படத்திலும் நடந்துள்ளதாக கூறுகிறார்கள். தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பெயர் இரண்டாம் உலகம். சிம்புதேவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், உலகம்.
எந்த வம்புக்கும் போகாத சிம்புதேவன் இதற்கெல்லாம் சரியான முடிவை கண்டடைவார் என்கிறார்கள் அவரைச் சார்ந்தவர்கள். அந்த முடிவு மீண்டும் தனுஷை நடிக்க வைப்பதாகவும் இருக்கலாம்.

0 comments :
Post a Comment