background img

புதிய வரவு

அனுஷ்கா - ப்ரியாமணியின் கவர்ச்சி மீது நம்பிக்கை!

கதை மற்றும் நடிப்பின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ... கவர்ச்சியின் மீது நம்பிக்கை வைத்து ரீலிஸ் ஆகும் சில படங்களை தமிழ் ரசிகர்கள் வெற்றிபெறச் செய்ததாலோ என்னவோ தமிழ் திரையுலகிற்கு டப்பிங் கவர்ச்சி படங்களுக்கு என்றுமே பஞ்சம் வந்ததில்லை. அந்த வரிசையில் காரசாரமான ஆந்திர மசாலா படங்கள் இரண்டு கவர்ச்சியை மட்டுமே நம்பி திரையிடப்படவிருக்கின்றன. நம்மூரில் காட்டாத கவர்ச்சியை‌யெல்லாம் தெலுங்கு‌ தேசத்திற்கு சென்று காட்டும் நம்மூர் நாயகிகள் நடித்த படங்கள்தான் அவை.

நடிகர் நாகார்ஜுனா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரியாமணியும், அனுஷ்காவும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டி நடித்திருக்கும் படம் வம்பு என்ற பெயரில் ரீலிஸ் ஆகிறது. இதேபோல நடிகர் மகேஷ்பாபுவும்- அனுஷ்காவும் நடித்த படம் ஒன்றும் ரீலிஸ் ஆகவிருக்கிறது. இந்த 2 படங்களுமே செய்தியின் ஆரம்பத்தி்ல் சொன்னபடி நாயகியரின் கவர்ச்சியை மட்டுமே நம்பி தமிழக தியேட்டர்களை அலங்கரிக்கவுள்ளன. தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் பிரத்யேக கவர்ச்சி போஸ்டர்களும் தயாராகி விட்டன. அனுஷ்கா - ப்ரியாமணியின் கவர்ச்சியை தமிழ் ரசிகர்கள் ரசிக்காமல் விட்டுவிடுவார்களா என்ன?

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts