background img

புதிய வரவு

பாகிஸ்தானில் உடல் சிதறி 31 வீரர் பலி


பெஷாவர்:பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவ மையத்தில் பள்ளி சீருடையில் வந்த தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியதில், 31 வீரர்கள் உடல் சிதறி பலியாயினர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பெஷாவர் மாவட்டம் மர்தான் நகரில் பஞ்சாப் மாகாணத்தின் ராணுவ மையம் உள்ளது. நேற்று காலை இங்குள்ள மைதானத்தில் ராணுவ வீரர்கள் கவாத்து பழகிக்கொண்டிருந்தனர். அப்போது ராணுவ மையத்தில் 15 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் பள்ளி சீருடையில் நுழைந்தனர். ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்த இடத்துக்கு வந்த அந்த இளைஞர்கள் திடீரென தங்கள் பையில் வைத்திருந்த வெடிமருந்தை வெடிக்கச்செய்தனர். இந்த சம்பவத்தில் 31 வீரர்கள் உடல் சிதறி பலியாயினர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை உயரக் கூடும். பாகிஸ்தானில் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் மொஹ்மான்ட் மாவட்டத்தில் 25 ஆயிரம் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக ராணுவ உளவு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த காலங் களில் மர்தான் ராணுவ மையத்தின் மீது, பாகிஸ்தானில் உள்ள தலிபான்கள் இரண்டுமுறை தாக்குதல் நடத்தியுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் குறித்து பிரதமர் யூசுப் ரசா கிலானி கண்டனம் தெரிவித்துள்ளார்.




0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts