background img

புதிய வரவு

இயக்குனர் ஆனார் நடிகை சாயாசிங்!

நடிகை சாயாசிங் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். திருடா திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சாயாசிங், அந்த படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார். ஆனால் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை; அப்படி அமைந்த வாய்ப்புகளும் எதிர்பார்த்தபடி பெயரைப் பெற்றுத்தரவில்லை. அதேநேரம் திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போட்டதால் அடுத்தடுத்து ஒத்தப்பாட்டு வாய்ப்புகளே வந்தன. இதனால் பல படங்களை மறுத்த சாயாசிங், கடைசியாக அனந்தபுரத்து வீடு படத்தில் நாயகியாக நடித்தார். ஆனால் அந்த படமும் ஓடவில்லை. இ‌தனால் அம்மணி இயக்குனர் அவதாரம் எடுக்க முடிவு செய்து பெங்காலி சினிமா பக்கம் போய் விட்டார்.

இதுபற்றி சாயாசிங் கூறுகையில், சினிமாவில் நடிகையாக, வழக்கமான காதலையும், டான்சையும் மட்டுமே செய்து வந்தேன். அதனால், தேடி வந்த சில வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். சினிமாவில், நடிப்பின் அடுத்த கட்டமாக டைரக்ஷனை பார்க்கிறேன். இதில் எனது திறமையை நிரூபிக்க வேண்டும். படம் இயக்குவது சிறப்பாக இருக்கிறது. இது என் கனவு என்று கூட சொல்லலாம். என் கனவு நிறைவேற இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது. இதில் நானே ஹீரோயினாக நடிக்கிறேன். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தொடர்ந்து படம் இயக்குவேனா என்பது தெரியாது. கன்னடத்தில் சில வாய்ப்புகள் வந்துள்ளது. அங்கு நடிப்பேன், என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts