காங்கிரஸ் பூதம் திமுகவை செல்லரிக்கிறது என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை அரசியல் ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குநருமான சீமான் கோவையில் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
÷நாம் தமிழர் இயக்கம் நடத்தும் பிரசாரக் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்படுகிறது. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிராக உள்ளது. பேச அனுமதி இல்லை என்பது பெரிய கொடுமையாகும்.
÷சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுகின்றனர். தமிழர்களை காப்பாற்றக் கோரி கதறுவது தேசத் துரோகமா? மக்களுக்கு உண்மை நிலை சென்று சேரக் கூடாது என காவல்துறை எங்கள் பிரசாரக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறது.
÷மக்கள் வேண்டுமானால் எனது பேச்சை நிராகரிக்கட்டும். அரசு தடுக்கக் கூடாது.
எங்கள் பிரசாரச் சுவரொட்டிகளை கிழிப்பது போலீஸ் வேலை அல்ல. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
÷எங்கள் பிரசாரக் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்தால் அதையும் மீறி தெருவில் இறங்கிப் போராடுவோம். எந்த காவல் நிலையத்தில் அனுமதி மறுக்கப்படுகிறதோ, அந்த காவல் நிலையத்தை முற்றுகையிடுவோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எழுச்சியும் புரட்சியும் வெடித்ததால்தான், மாணவர்களின் உயிர்த் தியாகம் மூலமாகத்தான் திமுக ஆட்சிக்கு வந்தது. இப்போது, அதே காங்கிரஸ் பூதம் திமுகவை செல்லரித்துக் கொண்டிருக்கிறது.
÷சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 80க்கும் கூடுதலான தொகுதிகளை திமுகவிடம் கேட்கிறது.
இதனால் திமுக தனித்து ஆட்சி அமைக்க முடியாது. காங்கிரஸýடன் கூட்டணி வைத்ததால் திமுக தேய்ந்துவருகிறது. காங்கிரஸýக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டு அக்கட்சியை தோற்கடிப்போம். கடந்த 6 மாதமாகவே எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
என்னை கொலை செய்யவும் முயற்சி நடக்கிறது. தமிழனத்தையே கொன்று குவித்த ராஜபட்சவுக்கு என்னைக் கொல்வது என்பது எளிதான செயல்தான். மரணத்துக்கு பயந்து பின்னடைய முடியாது என்றார்.

0 comments :
Post a Comment