background img

புதிய வரவு

சிரஞ்சீவிக்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை; நடிகை ரோஜா சொல்கிறார்

நடிகர் சிரஞ்சீவி 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார். இக்கட்சிக்கு கடந்த சட்டசபை தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்றன. இந்நிலையில் சிரஞ்சீவி சமீபத்தில் டெல்லியில் சோனியாகாந்தியை சந்தித்து காங்கிரசில் சேர்ந்தார்.

இதனால் அவரது கட்சி எம்.எல். ஏ.க்கள் 2 பேர் ஜெகன்மோகன் ரெட்டி அணிக்கு தாவி விட்டனர். இந்நிலையில் ஐதராபாத்தில் நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் சிரஞ்சீவி சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால்தான் தனிக்கட்சி தொடங்கினார். இவர் ஆந்திர மக்களுக்கு நல்லது செய்வார் என்று வேறு கட்சிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் அவரது கட்சியில் சேர்ந்தனர்.
ஆனால் அவர் திடீரென தனது கட்சியை காங்கிரசிடம் விற்று விட்டு அதில் போய் சேர்ந்து விட்டார்.

இனி சிரஞ்சீவியால் தனித்து செயல்பட முடியாது. சோனியா காந்தி- ராகுல்காந்தி ஆகியோரின் புகழ்பாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவரது கட்சியில் இருந்த ஏராளமான தொண்டர்கள் ஜெகன் மோகன் ரெட்டி அணிக்கு வந்து விட்டனர்.

தற்போது அவரது கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே அவருக்கு ஆதரவாக உள்ளனர். இனி சிரஞ்சீவிக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் இல்லை. அவரை காங்கிரசில் உள்ள மற்ற கோஷ்டி தலைவர்கள் வளர விட மாட்டார்கள். ஜெகன் மோகன் ரெட்டி அணி தற்போது பலமான அணியாக உள்ளது.


இவ்வாறு ரோஜா கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts