background img

புதிய வரவு

தற்கொலை நடிகையின் உண்மை கதை; சில்க்ஸ்மிதா படத்தில் ரஜினியாக நசுருதீன்ஷா

தமிழ் திரையுலகில் 1980 களில் கவர்ச்சி நடிகையாக கலக்கியவர் சில்க்ஸ்மிதா. தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் “மூன்றாம்பிறை”, “மூன்று முகம்”, “சகலகலா வல்லவன்”, “அவசர போலீஸ் 100” போன்ற பல படங்களில் சில்க்ஸ்மிதாவின் நடிப்பு பேசப்பட்டன. 1996-ல் சாலி கிராமத்தில் சில்க்ஸ்மிதா குடியிருந்த வீட்டில் அவர் மர்மமாக இறந்து கிடந்தார்.

காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை கதை இந்தியில் சினிமா படமாக தயாராகிறது. மிலன் இயக்குகிறார்.

சில்க் ஸ்மிதாவின் உறவினர்கள் நண்பர்களிடம் கேட்டும் அவர் வாழ்ந்த பகுதிகளில் ஆய்வு செய்தும் திரைக்கதை உருவாக்கியுள்ளார். சில்க் வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். ரஜினியுடனும் சில்க்ஸ்மிதா நடித்துள்ளார். எனவே ரஜினி வேடத்தில் நடிக்க நசுரு தீன்ஷாவை இயக்குனர் தேர்வு செய்துள்ளார்.

இதுபற்றி நசுருதீன் கூறும்போது, ரஜினி, சில்க்ஸ்மிதா நடித்த படங்களின் சி.டி.யை இயக்குனர் எனக்கு அனுப்பி வைத்தார். ரஜினி நடித்த “எந்திரன்” படத்தையும் பார்க்க உள்ளேன். அதன் பிறகு ரஜினி போல் நடிப்பேன் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts