அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 63-வது பிறந்தநாள் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 63 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 14-ந்தேதி (திங்கட் கிழமை) காலை 10 மணிக்கு இந்த திருமண விழா நடை பெறுகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விழாவில் கலந்து கொண்டு 63 ஜோடிகளுக்கும் திருமணம் நடத்தி வைக்கிறார்.
புதுமண தம்பதியருக்கு 63 விதமான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகின்றன. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்படுகிறார்கள். உறவினர்களும் உடன் வருகிறார்கள். ஜெயலலிதா பேரவை சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவில், ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் நயினார் நாகேந்திரன், திருவள்ளூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ரமணா, தென் சென்னை, வடசென்னை மாவட்ட செயலாளர்கள், ஸ்டிக்கர் ரவி, இளைய செல்வன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

0 comments :
Post a Comment