background img

புதிய வரவு

காலில் விலங்கு போன்ற கண்காணிப்பு : அமெரிக்க செயல் குறித்து புதிய விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் டிரிவேலி பல்கலை மோசடியில் சிக்கிக் கொண்ட மாணவர்களின் காலில், "எலக்ட்ரானிக் டேக்' கட்டியது சரி தான் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கிடையில், நடந்த மோசடிக்கு தான் பொறுப்பாக முடியாது என்றும், பல்கலையில் பணிபுரிந்த இந்திய பணியாளர் ஒருவர் தான் காரணம் என்றும் அப்பல்கலை குற்றம்சாட்டியுள்ளது.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரிவேலி பல்கலைக் கழகம், போலி விசா மூலம் வெளிநாட்டு மாணவர்களை சேர்த்த வழக்கில், இந்திய மாணவர்களின் கால்களில் "எலக்ட்ரானிக் டேக்3 எனப்படும் கருவி கட்டி விடப்பட்டது.


இதுகுறித்து, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில்,"இந்திய மாணவர்கள் குற்றவாளிகள் அல்ல. எலக்ட்ரானிக் டேக் உடனடியாக நீக்கப்பட வேண்டும்' என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.


வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி," அது குற்ற அடிப்படையில் கண்காணிக்கும் கருவி அல்ல. பல்வேறு விசாரணை வழிமுறைகளில் அதுவும் ஒன்று. அமெரிக்காவில் வழக்கமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை தான் அது' என்று விளக்கம் கொடுத்தார்.


இந்நிலையில், இவ்விவகாரத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் டிரிவேலி பல்கலைக் கழகம் தன் மவுனத்தை உடைத்து, நேற்று விளக்கம் அளித்தது. அதில், நடந்த மோசடிகளுக்கு அங்கு பணியாற்றிய இந்திய பணியாளர் ஒருவர் தான் காரணம் என்று கூறியுள்ளது.


இதுகுறித்து, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பல்கலை நிறுவனரும் தலைவருமான சூசன் சூ அனுப்பியிருந்த இ-மெயிலில் கூறியிருந்ததாவது:பல்கலை மீதான விசா மோசடி குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அமெரிக்க குடியேற்றத் துறை பல்கலையை மூடிவிட்டது. பல்கலையின் நிர்வாகத்தில் மாணவ உதவியாளராக பணியாற்றியவர் அஞ்சி ரெட்டி. ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த மாணவர் ராம் கிருஷ்ட கராவும், ரெட்டியும் சேர்ந்து கொண்டு, கல்விக் கட்டணம் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர். இது நடந்தது கடந்தாண்டு ஏப்ரல் மாதம்.அந்தப் பணத்தை கராவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சேர்த்துள்ளனர். இதைக் கண்டுபிடித்த பல்கலை, அவர்கள் இருவரையும் பணியில் இருந்து நீக்கிவிட்டது. குடியேற்றத் துறையிடம் அவர்கள் தான் பல்கலை மீது புகார் அளித்துள்ளனர்.மேலும், பல்கலையில் சேர்வதற்கு 140 பேரை தவிர்த்து, மீதி 5,500 மாணவர்களுக்கு ஐ-20 எனப்படும் அனுமதி ஆவணம் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பல்கலையின் விளக்கத்துக்கு அமெரிக்க குடியேற்ற துறை பதில் எதுவும் அளிக்கவில்லை.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts