background img

புதிய வரவு

சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை மறக்காதீர்: சோனியா

புதுடில்லி:"பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் மக்களின் கஷ்டத்தை உணர வேண்டும். பதவி, பணத்திற்காக ஓடுவதைவிட்டு ஏழைகளின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா கூறினார்.சுதந்திர போராட்ட தியாகி சவுத்திரி ரன்பீர சிங்கின் நினைவாக, தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி டில்லியில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா பங்கேற்று பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது:சுதந்திர போராட்ட தியாகிகளை நாம் நினைத்து பார்க்க வேண்டும். தியாகி சவுத்திரி ரன்பீர் சிங், 64 வயதாக இருக்கும் போது, தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். இது போன்ற கொள்கைப் பிடிப்புடன் இருந்தவர்கள் இன்றைய சூழ்நிலைக்கு தேவை. ஆனால், இன்றோ, பதவிக்கும், எப்படியாவது பணத்தை சம்பாதித்து விட வேண்டும் என்று தீவிரம் காட்டுகின்றனர். பதவி, பணத்தால் வருகின்ற மகிழ்ச்சி வாழ்க்கை முழுவதற்கு நிலைத்து நிற்க முடியாது. எதற்கும் எல்லை உண்டு. நமது சுதந்திர போராட்ட தியாகிகள் பதவி, பணத்தை பேராசை பட்டு இருந்தால், நம் நாட்டிற்கு சுதந்திர கிடைத்திருக்க முடியுமா.


பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் மக்களின் கஷ்டங்களை உணர வேண்டும். ஏழைகளின் முன்னேற்றத்திற்கும், இளைஞர்களுக்கு புதிய வேலை வாயப்புக்களை உருவாக்குவதிலும், விவசாயிகளின் மேம்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.சவுத்திரி ரன்பீர் சிங் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நம் நாடு கடன்பட்டு இருக்கிறது.இவ்வாறு சோனியா பேசினார். விழாவில் அரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹுடா , தொலைதொடர்புதுறை அமைச்சர் கபில் சிபல், இணை அமைச்சர் சச்சின் பைலட், ஆகியோர் பங்கேற்றனர்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts