background img

புதிய வரவு

அப்பம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 2 கப்
உளுத்தம்பருப்பு - 1 /2 கப்
தேங்காய் பால்- 1கப்
சமையல் சோடா - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.மாவை நன்றாக நுரைக்க அரைத்துக் கொள்ளவும்.மாவுடன் தேவையான அளவு உப்பு, தேங்காய்ப்பால், சமையல் சோடா இவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.ஒரு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.மிதமான சூட்டில் வைத்து ஒரு சிறிய கரண்டி அளவு மாவை எடுத்து அப்பம் போல ஊற்றவும்.
அப்பம் எண்ணெயில் மேலே மிதந்து வரும்.அது வெள்ளையாக இருக்கும் பொழுதே திருப்பி போடவும்.இரண்டு புறமும் ஒரே மாதிரி வெந்தவுடன் எடுத்து விடவும்.இந்தஅப்பத்தை தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts