திண்டுக்கல் அருகே கொசவபட்டியில் புனித உத்திரியமாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடை பெற்றது. மதுரை, சிவகங்கை, அய்யம்பாளையம், தேனி, சத்திரப்பட்டி, திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த 228 காளைகள் பங்கேற்றன. இந்த காளைகளுக்கு கால்நடை உதவி இயக்குனர்கள் ராஜேந்திரன், அறிவழகன் ஆகியோர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
பதிவு செய்யப்பட்ட மாடுபிடி வீரர்கள் 315 பேர் மட்டும் காளைகளை அடக்கும் போட்டியில் இடம் பெற்றனர். ஒவ்வொரு காளையாக களத்தில் இறங்கின. கூர்மையான கொம்புடன், ஆஜானுபாகுவான காளைகள் களத்தில் துள்ளிக்குதித்து ஓடின.
அவற்றை அடக்க வீரர்கள் கடுமையாக போராடினார்கள். இந்த வீர விளையாட்டில் காளைகள் முட்டி தள்ளியதில் 51 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தயாராக இருந்த வட்டார மருத்துவ அலுவலர் மாலதி பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இவர்களில் பள்ளபட்டி ராஜா, வெள்ளோடு ஜேசுராஜ், கொசவபட்டி செபாஸ்டின், நத்தம் ராஜா, அலங்காநல்லூர் சரவணன்,வேல்முருகன், தீபக் ராஜா, கண்ணன், மருநூத்து அழகர், மடூர் பாலமுருகன் ஆகிய 10 பேர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
களத்தில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒரு சில வீரர்கள் அதிக அளவில் பரிசுகளை அள்ளிச்சென்றனர். அப்போது பார்வையாளர்கள் வரிசையில் இருந்த ஏராளமானவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஜல்லிக்கட்டு நடந்த இடத்தில் உயரமான கட்டிடங்கள் மற்றும் வீட்டு மாடிகளில் இருந்து ஏராளமானவர்கள் போட்டியை கண்டு ரசித்தனர்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் விஜயன், கொசவபட்டி ஊராட்சி தலைவர் ஜான்பீட்டர், நத்தம் தொகுதி அ.தி.மு.க.செயலாளர் கண்ணன், பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் பரசுராமன் உள்ளிட்ட பலர் கண்டுகளித்தனர். திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ராமசாமி, தாசில்தார் செல்வராஜ் ஆகியோர் விதிகள் படி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர். புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணிகளை கவனித்தனர்.

0 comments :
Post a Comment