
புது தில்லியில் திங்கள்கிழமையன்று, உற்பத்தித் திறன் மேம்பாடு, தரம் குறித்த சர்வதேச மாநாட்டில் பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியது: ""பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆய்வு, மேம்பாட்டுக் கூடங்களை நடத்தி வருகின்றன. ஆனால் இந்திய நிறுவனங்கள், தர மேம்பாட்டைத் தங்களுடைய உற்பத்தி, செய்முறையின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்ள இன்னும் போதிய முயற்சி எடுக்கவில்லை.
கடும் போட்டியும், வேகமான தொழில்நுட்ப மேம்பாடுகளும் நிகழ்ந்துவரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இதனால் நமக்குப் பல தொழில்களில் புதிய பொருள்களும் சேவைகளும் கிடைத்து வருகின்றன. மேலும், புதியவர்கள் ஒரு தொழிலில் பிரவேசிப்பதற்கு எதிராக உள்ள முட்டுக்கட்டைகளை தொழில்நுட்பம் நொறுக்கி வருகிறது.
தர மேம்பாட்டுக்கு உதவும் தொழில் நுட்பங்கள் தனியார் துறைக்கு மட்டுமல்லாமல், பொதுத்துறை சார்ந்த சேவைகளின் வினியோகத்துக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
அரசின் பல சேவைகளை குறைந்த செலவில், மிக நம்பகமான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதைத் திட்டமிட இவை பயன்படும். உதாரணமாக, உற்பத்தித் திறன் மேம்பாட்டுத் தொழில்நுட்பமானது, விவசாய உற்பத்தியை அதி
கரிக்க உதவும். பொருள்களை பரவலாகவும் சீராகவும் மக்களிடம் கொண்டு செல்லவும் உதவும்.
உற்பத்தியைத் திட்டமிடுவதிலும், பொருள்களை சந்தைக்குக் கொண்டு செல்வதை சீர் செய்வதிலும் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதால் உற்பத்தி பெருகும் வாய்ப்புள்ளது. இதனால் உற்பத்தி சுழற்சியும் வேகமாக நடக்கிறது. சரக்கு இருப்பும் கணிசமாகக் குறையும்,'' என்றார் அவர்.
இந்திய விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை சீராகவும் பரவலாகவும் சந்தைக்குக் கொண்டு செல்வதிலுள்ள சிக்கல்களினால்தான் அவ்வப்போது உணவுப் பணவீக்கம் உயர்வதாகக் கருதப்படுகிறது.
அண்மைக்காலமாக இந்தக் குறைபாடுகள் அரசின்
கவனத்தை ஈர்த்து வருகின்றன என்றும் குறிப்பிட்டார் மன்மோகன் சிங்.
அன்னிய நிறுவனங்களுக்கு அழைப்பு
இந்தியாவில் கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்யும் சர்வதேச நிறுவனங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.
உலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான மிட்சுபிஷியின் தலைவரும், செயல் இயக்குநருமான கெயிச்சி நககாக்கி, தலைமைச் செயல் அலுவலர் கென் கொபயாஷி ஆகியோர் பிரதமரை திங்கள்கிழமை புதுதில்லியில் சந்தித்தனர். அப்போது பிரதமர் இவ்வாறு கூறினார்.
இந்திய கட்டமைப்புத் துறையில் மிட்சுபிஷி பங்குபெறுவதை வரவேற்ற பிரதமர், ஜப்பானைச் சேர்ந்த பிற நிறுவனங்களுக்கும் அனைத்துவிதமான வசதிகளும் இந்திய அரசு செய்து தரும் என்று உறுதி கூறியதாக பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து கூறிய கொபயாஷி, ""இந்தியக் கட்டமைப்புத்துறை மட்டுமல்லாமல், அணுசக்தி உள்பட எரிசக்தி, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளிலும் மிட்சுபிஷி நிறுவனம் முதலீடு செய்ய விரும்புகிறது'' என்றார்.
பிராந்திய-சர்வதேச அளவில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அந்நிறுவனம் அறிந்திருப்பதாகவும், கட்டமைப்பு மேம்பாட்டில் தனியார்-பொதுத்துறை கூட்டு முயற்சியில் தங்கள் நிறுவனத்துக்கு ஈடுபாடு உண்டென்றும் கொபயாஷி கூறினார்.
0 comments :
Post a Comment