
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தொடங்கிய இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது: விலைவாசி உயர்வு குறித்து பலர் இங்கே பேசினார்கள். வெங்காயம் கிலோ ரூ. 60-க்கு விற்றபோது எல்லோரும் வேதனை தெரிவித்தார்கள். ஆனால், அதே வெங்காயத்தை பயிரிட்டு விலையில்லாமல் குப்பையில் வீசியிருக்கிறேன். இதை நாங்கள் எங்கேபோய் தெரிவிப்பது?
தக்காளி, வெங்காயம் போன்ற விளை பொருள்களின் விலை உயர வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் நிலை உயரும். அவர்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்றார் தண்டபாணி.
0 comments :
Post a Comment