background img

புதிய வரவு

வடபழநி ஆண்டவர் திருக்கோயில்

சித்தர்களால் உருவாக்கப்பட்ட வடபழநி முருகன் கோயிலுக்கு 1972ல் 72 அடி உயரத்தில் தெற்கு ராஜகோபுரம் கட்டப்பட்டது. முதல் முறையாக அப்போது கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

கோயில் அமைப்பு::

கருவறையில் மூலவரான வடபழநி ஆண்டவர் ஆண்டிக் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கோயில்வளாகத்தில் வரசித்தி விநாயகர், சொக்கநாதர், வள்ளி தெய்வயானையுடன் சண்முகர் வீற்றிருக்கிறார், இங்கு செவ்வாய் சந்நிதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஆறுமுகர் சந்நிதி, அருணகிரிநாதர், ஆஞ்சநேயர் சந்நிதி மற்றும் சித்தர் பீடம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

திருவிழா:::

சித்திரையில் தமிழ்வருடப் பிறப்பு, வைகாசியில் விசாகத்திருவிழா, ஆடிக்கிருத்திகை, புரட்டாசியில் விநாயக சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசியில் கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், லட்சார்ச்சனை, மார்கழியில் புதுவருட சிறப்பு அலங்காரம், மாணிக்கவாசகர் உற்சவம், ஆருத்ரா தரிசனம், தை மாதத்தில் தைப்பூசம், மாசியில் மாசிமகம், பங்குனியில் பங்குனி உத்திரம் என உற்சவங்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

இத்திருக்கோயிலுக்கு வெளியே கிழக்குப்புறத்தில் திருக்குளம் அமைந்துள்ளது. கிருத்திகை நாட்களில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் பலவகை காவடிகளை எடுத்து வந்து பழநியாண்டவருக்கு காணிக்கை செலுத்துகின்றனர்.

இத்திருக்கோயிலில் பக்தர்கள் தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்ற தங்கத்தேர் இழுக்க வசதியும் செய்யப்பட்டுள்ளது. எல்லா நாட்களிலும் மாலை நேரத்தில் தங்கத்தேர் இழுக்கலாம். இதற்கு காணிக்கையாக ஒரு சுற்றுக்கு ஆயிரம் ரூபாய் கோயிலுக்கு செலுத்த வேண்டும்.

பூஜை நடைபெறும் நேரங்கள்:::

அதிகாலை 5.30 மணி பள்ளியறை, காலை 7 மணி காலசாந்தி, பகல் 12 மணிஉச்சிகால பூஜை, மாலை 5 மணிசாயரட்சை, இரவு 9 மணிஅர்த்த ஜாம பூஜை.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல பஸ் வசதி உள்ளது.மேலும் இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை நேரடி பஸ் வசதி உள்ளது. கோயம்பேட்டில் உள்ள வெளியூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 100 அடி சாலைக்கு அருகே இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts